ஆரம்பமானது விக்ரமின் சியான் 61...வெளியான மாஸ் அப்டேட்
சென்னை : தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவர் விக்ரம். கடைசியாக 2019 ம் ஆண்டு விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் படம் ரிலீசானது. இருந்தாலும் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இதனால் விக்ரமின் அடுத்த படம் எப்போது ரிலீசாகும் என அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். படம் ரிலீசாகாவிட்டாலும் விக்ரமின் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்டைகளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரிலீசுக்கு தயாராகும் படங்கள்
மணிரத்னம் இயக்கி முடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் ரோலில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். இதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் மகான் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இரு படங்களின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளும் நடந்து வருகின்றன.

விக்ரமின் 60 வது படம்
விக்ரமின் 60 வது படமாக உருவாகி உள்ள மகான் படத்தில் முதல் முறையாக தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார் விக்ரம். இந்த படத்தில் விக்ரம் வில்லன் ரோலில் நடித்துள்ளதாகவும், துருவ் விக்ரம் போலீஸ் அதிகாரி ரோலில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

அதிக ரோல்களில் விக்ரம்
மகான் படத்திற்கு பிறகு அதிகம் எதிர்பார்க்கப்படும் விக்ரம் படம் என்றால் அது கோப்ரா. இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான வேடங்களில் விக்ரம் நடித்துள்ளாராம். இதனால் சிவாஜி, கமலுக்கு பிறகு ஒரே படத்தில் அதிக வேடங்களில் நடிக்கும் நடிகர் என்ற பெயரை விக்ரம் பெறுவார் என கூறப்படுகிறது.

சியான் 61 அப்டேட்
இந்நிலையில் விக்ரமின் அடுத்த படம் பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது. விக்ரமின் அடுத்த படமான சியான் 61 படத்தை டைரக்டர் பா.ரஞ்சித் தான் இயக்க போகிறாராம். இந்த படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாம். .சியான் 61 படத்திற்கான ஃபோட்டோஷுட் பணிகள் முடிந்து விட்டதாம்.

விரைவில் அறிவிப்பு
விரைவில் சியான் 61 படத்தின் பூஜையுடன், ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாகவும், அதற்கு முன் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் - நடிகைகள் பற்றிய அறிவிப்பும் வெளியிடப்பட உள்ளதாம். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











