Chiyaan 62: விக்ரம், SJ சூர்யா கூட்டணியில் ஃபஹத் பாசில்..? சியான் 62-ல் காத்திருக்கும் சம்பவம்!

சென்னை: தங்கலான் படத்தைத் தொடர்ந்து சியான் 62-ல் பிஸியாக காணப்படுகிறார் விக்ரம். கோலிவுட்டின் வெரைட்டியான ஹீரோக்களில் ஒருவரான விக்ரம் நடிப்பில் கடைசியாக பொன்னியின் செல்வன் வெளியானது. அதன்பின் பா ரஞ்சித் இயக்கிய தங்கலான் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது அவர் நடித்து வரும் சியான் 62 படத்தில் ஃபஹத் பாசில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம், SJ சூர்யா கூட்டணியில் ஃபஹத் பாசில்..?
கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான விக்ரம், வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடிப்பில் மிரட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் பா ரஞ்சித்துடன் தங்கலான் படத்தில் இணைந்தார். முதன்முறையாக இணைந்துள்ள இயக்குநர் பா ரஞ்சித் - சியான் விக்ரம் கூட்டணி, தங்கலான் படத்தில் மிரட்ட காத்திருக்கிறது.

 Chiyaan 62: Fahadh Faasil has signed up for Vikram and SJ Suryahs Chiyaan 62

தங்கலான் படப்பிடிப்பு முடிந்துவிட்டதை அடுத்து தனது 62 வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம். சியான் 62 என்ற டைட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தை சு அருண்குமார் இயக்கி வருகிறார். சித்தா திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த சு அருண்குமார், தனது இரண்டாவது படத்தில் விக்ரமுடன் இணைந்துள்ளது சியான் 62 மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் பற்றிய அறிவிப்பை தரமான டீசருடன் வெளியிட்டிருந்தது படக்குழு.

அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் சியான் 62 படத்தின் வில்லனாக எஸ்ஜே சூர்யா கமிட்டாகியுள்ளதாக படக்குழு அறிவித்தது. தமிழில் தற்போது நம்பர் 1 வில்லன் என்றால் அது எஸ்ஜே சூர்யா தான். விக்ரம் ஏற்கனவே நடிப்பில் அசுரன், எஸ்ஜே சூர்யா வில்லத்தனமாக நடிப்பதில் அரக்கன் என்றே சொல்லலாம். இந்த இருவர் போதாது என இப்போது மலையாளத்தில் இருந்து ஃபஹத் பாசிலும் சியான் 62 படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் சியான் 62 படம் மீதான எதிர்பர்ப்பு தாறுமாறாக எகிறிக் கொண்டே இருக்கிறது. இதுபற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் சியான் 62 படத்தில் ஃபஹத் பாசில் நடித்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்க வைத்துள்ளது. அதேபோல் தெலுங்கில் இருந்தும் ஒரு முன்னணி நடிகர் வில்லனாக நடிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவும் சியான் 62 படத்துக்கு அதிக ஹைப் கொடுத்துள்ளது.

தங்கலானை தொடர்ந்து சியான் 62 படமும் விக்ரம் கேரியரில் தரமான சம்பவமாக இருக்கும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த வரிசையில் விரைவில் மகான் 2ம் பாகத்தில் நடிக்கவும் விக்ரம் கால்ஷீட் கொடுத்துள்ளார். அதேபோல் கோப்ரா இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்திலும் விக்ரம் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X