Chiyaan 63: மீண்டும் ரிஸ்க் எடுக்கும் விக்ரம்.. கோப்ரா கூட்டணியில் சியான் 63.. ஆனால் ஒரு ட்விஸ்ட்!
சென்னை: விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
அதேநேரம் இந்த வாரம் அவரது துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், விக்ரமின் 63வது படத்தின் இயக்குநர் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, சீயான் 63 படத்தில் மீண்டும் கோப்ரா கூட்டணி இணைவதாக சொல்லப்படுகிறது.
மீண்டும் ரிஸ்க் எடுக்கும் விக்ரம்
கோலிவுட்டின் வெரைட்டியான் மாஸ் ஹீரோவாக கலக்கி வருகிறார் சீயான் விக்ரம். சேது படத்தில் இருந்து கம்பேக் கொடுத்த விக்ரம், அடுத்தடுத்து கமர்சியல் ப்ளஸ் கிளாஸிக் வகை படங்களில் நடித்து இன்று உச்சம் தொட்டுள்ளார். கடைசியாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக மிரட்டியிருந்தார். பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தில் விக்ரம் நடிப்பை ரசிகர்கள் பாராட்டியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது பா ரஞ்சித்தின் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இந்தப் படத்தின் டீசரை பார்த்த ரசிகர்கள், விக்ரம் நடிப்பை பார்த்து சிலிர்த்துவிட்டனர். இந்தப் படம் நிச்சயமாக விக்ரம் கேரியரில் தரமான சம்பவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே விக்ரம் - கெளதம் மேனன் கூட்டணியில் உருவான துருவ நட்சத்திரம், இந்த வாரம் வெளியாகவுள்ளது.
அதேபோல், சீயான் 62 படத்தின் அபிஸியல் அப்டேட்டும் ஏற்கனவே வெளியாகிவிட்டது. இந்தப் படத்தை அருண்குமார் இயக்கவுள்ளார். இந்நிலையில், விக்ரமின் 63வது படத்தின் இயக்குநர் குறித்து தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்தாண்டு விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் பலவிதமான கெட்டப்களில் நடித்திருந்தார். ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கோப்ரா படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்களே கிடைத்தன. விக்ரம் ரொம்பவே ரிஸ்க் எடுத்து நடித்திருந்தாலும், மேக்கிங், திரைக்கதை சொதப்பலால் படம் தோல்வியடைந்தது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாத விக்ரம், மீண்டும் அஜய் ஞானமுத்துவுடன் இணைய முடிவு செய்துள்ளாராம். அதன்படி, சீயான் 63 படத்தை அஜய் ஞானமுத்து தான் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
அதேபோல், கோப்ராவை தொடர்ந்து சீயான் 63 படத்திற்கும் ஏஆர் ரஹ்மான் தான் இசையமைக்கவுள்ளாராம். இந்தப் படம் டிமான்டி காலனி 2ம் பாகமாக உருவாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜய் ஞானமுத்துவுக்கு மிகப் பெரிய அடையாளம் கொடுத்தது டிமான்டி காலனி திரைப்படம் தான். இதன் இரண்டாம் பாகத்தை அஜய் ஞானமுத்து பாலிவுட்டில் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், தற்போது சீயான் 63 தான் டிமான்டி காலனி 2ம் பாகமாக உருவாகவுள்ளதாகத் தெரிகிறது. மேலும், இந்தப் படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ அல்லது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் குறித்த அபிஸியல் அப்டேட் தங்கலான் ரிலீஸுக்குப் பின்னர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











