சியானின் மிரட்டலான நடிப்பு... வெளியானது மகான் டீசர்
சென்னை : நடிகர் விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து கலக்கும் படம் மகான்.
இந்தப் படம் வரும் பிப்ரவரி 10ம் தேதி அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாக உள்ளது.
படத்தின் பிரமோஷனை படக்குழுவினர் முடுக்கி விட்டுள்ள நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

மகான் படம்
நடிகர் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், சிம்ஹா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் பிப்ரவரி 10ம் தேதி அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாக உள்ள படம் மகான். நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருந்த இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஓடிடியில் நேரடியாக வெளியீடு
ஆனால் கொரோனா பரவல், அதன் காரணமாக திரையரங்குகளில் ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படம் தற்போது ஓடிடியில் நேரடியாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

பிப்ரவரி வெளியீடு
இவரது முந்தைய படமான ஜகமே தந்திரமும் ஓடிடியில் வெளியான நிலையில், தற்போது மகான் படமும் ஓடிடியில் வெளியாகவுள்ளது. வரும் பிப்ரவரியில் இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில் அடுத்தடுத்து பிரமோஷன்களில் படக்குழு தற்போது ஈடுபட்டுள்ளது.

அடுத்தடுத்த போஸ்டர்கள்
படத்தின் விக்ரம், துருவ் விக்ரம் ஆகியோரது போஸ்டர்கள் மட்டுமே வெளியான நிலையில், தற்போது அடுத்தடுத்து சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்டவர்களின் போஸ்டர்கள் மற்றும் அவர்களது கேரக்டர்களின் பெயர்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி வருகிறது.

டீசர் வெளியீடு
மேலும் படத்தின் இரண்டு பாடல்களும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் தற்போது படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விக்ரம் சிறுவனாக இருந்தபோது நடக்கும் நிகழ்வுகள் மற்றும் பெரியவனான பின்பு அவர் செய்யும் செயல்கள் காட்சிகளாக காட்டப்பட்டுள்ளன.

வித்தியாசமான கெட்டப்புகள்
ஒரு காட்சியில் பள்ளியில் ஆசிரியராக காணப்படுகிறார். அப்போது மிகவும் சிறப்பாக காணப்படுகிறார். அடுத்தடுத்த காட்சிகளில் வேறு மாதிரி காட்சியளிக்கிறார். இவ்வாறு இந்த டீசர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் காணப்படுகிறது.

கேங்ஸ்டர் கதை
எப்போதும் கேங்ஸ்டர் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்திலும் அதே கதையையே எடுத்துள்ளார். இந்தப்படத்தில் விக்ரமுடன் சிம்ரன் முதல்முறையாக இணைந்துள்ளதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்த படங்கள்
விக்ரம் இறுதியாக கடாரம் கொண்டான் படத்தில் மிரட்டியிருந்தார். முன்னதாக சாமி 2 மற்றும் ஸ்கெட்ச் படங்களிலும் இவரது நடிப்பு வழக்கம்போல சிறப்பாகவே அமைந்தது. தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களிலும் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இவரது மகான் படம் தற்போது ரிலீசாக உள்ளது.


Click it and Unblock the Notifications











