ஏஆர் ரஹ்மான் கமல் கூட மட்டுமில்ல சீயான் விக்ரம் கூடவும் தான்!
சென்னை: ஏஆர் ரஹ்மான், சீயான் விக்ரம்58லும் இசையமைக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.
டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இவர் அடுத்ததாக சீயான் விக்ரமை இயக்கவுள்ளார்.
இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மற்றும் வையகாம் 18 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படம் நடிகர் விக்ரமுக்கு 58வது படமாகும். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது.

படத்தின் பெயர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இப்போது நடிகரின் பட எண்ணிக்கையை வைத்தே ஓட்டி விடுகின்றனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கின்போது பெயரை வெளியிடுவது ஃபேஷனாகிவிட்டது. அதன்படி இந்த படத்தையும் சீயான் விக்ரம் 58 என குறிப்பிட்டு வருகின்றனர்.
இப்படக்குழு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
'ஐ' படத்திற்கு பிறகு மீண்டும் விக்ரமும் - ரஹ்மானும் இணைகின்றனர். இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











