அப்பா யார்? மகன் யார் ?...குழம்ப வைத்த துருவ் விக்ரமின் மாஸ் ஃபோட்டோ

சென்னை : விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதல் முறையாக இணைந்து சியான் 60 படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Recommended Video

விக்ரம் - துருவ் விக்ரம் நடிக்கும் படத்தில் இணைந்த சின்னத்திரை நயன்தாரா.. டாப் 5 பீட்ஸ் - வீடியோ

தற்போது சியான் 60 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சியான் 60 படத்தின் பணிகள் ஏறக்குறைய முடிந்து விட்டதாகவே கூறப்படுகிறது.

பிறந்தநாள் கொண்டாடாத விக்ரம்

பிறந்தநாள் கொண்டாடாத விக்ரம்

ஏப்ரல் 17, விக்ரமின் பிறந்தநாள். இந்த ஆண்டு விக்ரம் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை. தனது நெருங்கிய நண்பரான விவேக் உயிரிழந்ததால் இந்த ஆண்டு விக்ரம் பிறந்தநாள் கொண்டாடவில்லை. விவேக்கின் மரணத்தின் போது தனது மகன் துருவுடன் சென்று விக்ரம் அஞ்சலி செலுத்தினார்.

ரசிகர்களை குழப்பிய ஃபோட்டோ

ரசிகர்களை குழப்பிய ஃபோட்டோ

துருவ் பதிவிட்ட இந்த ஃபோட்டோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த ஃபோட்டோவை பார்த்து விட்டு, இவர்கள் இரட்டையர்களா அல்லது தந்தை- மகனா அல்லது சகோதர்களாக என தாங்கள் குழம்பி விட்டதாக பலர் கமெண்ட் செய்துள்ளனர்.

துருவ் பகிர்ந்த ஃபோட்டோ

துருவ் பகிர்ந்த ஃபோட்டோ

இந்நிலையில் தனது தந்தையுடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் துருவ். இது சியான் 60 படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது. இந்த ஃபோட்டோவுடன் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் சியான் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

லைக்குகளை அள்ளும் ஃபோட்டோ

லைக்குகளை அள்ளும் ஃபோட்டோ

விக்ரமிற்கு ஒவ்வொரு ஆண்டும் வயது உயர்வதே இல்லை என பலர் கூறுவார்கள். இதற்கு மற்றொரு சாட்சியாக இந்த ஃபோட்டோ அமைந்துள்ளதாக மேலும் சிலர் கமெண்ட் செய்துள்ளனர். இந்த ஃபோட்டோ லைக்குகளையும் அள்ளி வருகிறது. இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர்.

மீண்டும் பேட்ட டீம்

மீண்டும் பேட்ட டீம்

சியான் 60 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படத்தில் விக்ரம், துருவ் விக்ரம், வாணி போஜன், சிம்ரன், சனந்த், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பேட்ட படத்தில் நடித்த பலர் இந்த படத்திலும் இணைந்துள்ளது மற்றொரு பிளஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X