Vikram Net Worth: 57 வயதிலும் உடலை வருத்தி நடிக்கும் மகான்.. சியான் விக்ரமின் சொத்து மதிப்பு இதோ!

சென்னை: 1966ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி சென்னையில் பிறந்த கென்னடி ஜான் விக்டர் சினிமாவில் விக்ரமாக அறிமுகமானார்.

பாலா இயக்கத்தில் வெளியான சேது படத்திற்கு பிறகு சியான் விக்ரம் ஆக தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி 57 வயதிலும் வெறித்தனமாக நடித்து மாஸ் காட்டி வருகிறார்.

57வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் ஆதித்த கரிகாலனின் கஜானாவில் ஒட்டுமொத்தமாக எவ்வளவு சொத்து இருக்கிறது, அவர் வாங்கும் சம்பளம் உள்ளிட்ட தகவல்களை இங்கே பார்க்கலாம் வாங்க..

Chiyaan Vikram assets and Net Worth details are here!

57வது பிறந்தநாள்: சியான் விக்ரம் தனது 57வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நடிகர் விக்ரமுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரோமோஷனல் டூருக்காக ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினருடன் டூர் அடித்து வருகிறார் சியான் விக்ரம்.

உடலை வருத்தி நடிக்கும் மகான்: என் காதல் கண்மணி படத்தின் மூலம் 90ல் சினிமாவில் நடிகராக அறிமுகமான விக்ரம் சேது படத்திற்கு முன்பாகவே கிட்டத்தட்ட 20 படங்களில் நடித்துள்ளார். ஆனால், அந்த படங்கள் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை.

சேது படத்தில் உடலை வருத்தி நடித்த சியான் விக்ரமுக்கு கைமேல் வெற்றி கிடைத்த நிலையில், அதன் பிறகு ரிஸ்க் எடுப்பது எல்லாம் தனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி என நினைத்துக் கொண்டு இந்தியாவின் கிறிஸ்டியன் பேல் ஆகவே மாறிவிட்டார் சியான் விக்ரம்.

Chiyaan Vikram assets and Net Worth details are here!

சம்பளம்: சேது, தில், ஜெமினி, தூள், சாமி, பிதாமகன், அந்நியன், ஐ என ஏகப்பட்ட பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ள சியான் விக்ரம் கடந்த ஆண்டு மகான், கோப்ரா, பொன்னியின் செல்வன் என பேக் டு பேக் 3 படங்களை கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்தார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்து மிரட்டி இருந்தார் சியான் விக்ரம். அந்த படத்தின் வசூல் 500 கோடியை கடந்த நிலையில், சியான் விக்ரமின் மார்க்கெட்டும் ஓவர்சீஸில் அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர். இந்நிலையில், புதிதாக ஒரு படத்துக்கு 35 கோடி ரூபாய் சம்பளமாக சியான் விக்ரம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Chiyaan Vikram assets and Net Worth details are here!

விளம்பரங்கள் மூலம் வருமானம்: சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே டிவி விளம்பரங்களில் மாடலாக நடித்திருந்தவர் தான் விக்ரம். சோழா டீ, டிவிஎஸ் எக்ஸ் எல் உள்ளிட்ட பல விளம்பரங்களில் நடித்து வந்த நிலையில் தான் சினிமா வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அதன் பிறகு பல முன்னணி நிறுவனங்களில் ஐ படத்தில் வருவது போல மாடலாக நடித்து வருகிறார் சியான் விக்ரம். லேன்கம் ஃபேஷ் வாஷ், மெனி அண்ட் மோய் ஐ வாஷ், குஸ்ஸி ரஷ் பர்ஃப்யூம், மகாரி ஃபேஸ் க்ரீம், காம்ஃபி மேட் பியர்ட் ஷாம்பு, கோக்கனட் ஹேர் ஆயில் என பல முன்னணி நிறுவனங்களின் விளம்பர தூதுவராகவும் செயல்பட்டு வருகிறார் சியான் விக்ரம்.

சொத்து மதிப்பு: 1992ம் ஆண்டு ஷைலஜா பாலகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட சியான் விக்ரமுக்கு ஒரு மகளும் துருவ் விக்ரம் எனும் மகனும் உள்ளனர். மகளை பெரிய இடத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ள சியான் விக்ரம் துருவ் விக்ரமை ஹீரோவாக மாற்றி உள்ளார்.

ஆண்டுக்கு 2 மில்லியன் டாலர்கள் வரை சியான் விக்ரம் சம்பாதிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 151 கோடி எனக் கூறுகின்றனர். பொன்னியின் செல்வன் 2வின் ஹைலைட்டே ஆதித்த கரிகாலனின் அந்த மரணம் தான். அதனை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். துருவ நட்சத்திரம் படத்தில் ஜானாக வந்து தெறிக்கவிடப் போகும் சியான் விக்ரம் தங்கலான் படத்தில் தேசிய விருதுகளை அள்ளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X