விஜய்,அஜித் பற்றி கேட்ட ரசிகர்கள்.. கூலாக பதில் சொன்ன சியான் விக்ரம்!
சென்னை: தான் ஏற்றுக்கொண்டு நடிக்கும் கதாபாத்திரத்திற்கு எந்த அளவிற்கு வேண்டுமானாலும் ரிஸ்க் எடுக்க கூடியவர் நடிகர் விக்ரம்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்த மகான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது
இந்த நிலையில் விக்ரமிடம் ரசிகர்கள் விஜய்,அஜித் பற்றி கேட்ட கேள்விக்கு ரொம்பவே கூலாக விக்ரம் பதில் அளித்துள்ளார்

எந்தவிதமான ரிஸ்க்கையும்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் விக்ரம் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் விக்ரமுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மற்ற நடிகர்களிடம் இருந்து சற்று வித்தியாசமாக யோசிக்கும் விக்ரம் தான் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கதைகளையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரத்திற்காக எந்தவிதமான ரிஸ்க்கையும் எடுக்கக் கூடிய ஒரு மிகச் சிறந்த நடிகராக விக்ரமும் உள்ளார்.

கேங்ஸ்டர் டானாக
இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான மகான் படத்தில் அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்திருப்பார். விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இவ்வளவு சீக்கிரமாகவே இணைந்து நடிப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

நேரடியாக ஓடிடியில்
ஆதித்ய வர்மா மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான விக்ரம் இரண்டாவது படத்திலேயே விக்ரமுடன் இணைந்து நடித்து பிரமாதப்படுத்தி இருப்பார் மகான் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் மேத்தமேட்டிக்கல் ப்ரொஃபஸராக நடித்துள்ள கோப்ரா விரைவில் வெளியாக உள்ளது.

கூலாக பதில் அளித்த விக்ரம்
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் செம ஸ்டைலிஸில் உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ள துருவநட்சத்திரம் திரைப்படம் பணிகள் மொத்தமும் முடிந்து ரிலீசாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கோப்ராவைத் தொடர்ந்து விக்ரம் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக பேச்சுவார்த்தை அடிபடுகிறது. தான் முன்னணி நடிகராக இருப்பினும் சக நடிகர்களை மிகவும் மதிக்கும் விக்ரம் ரசிகர்கள் விஜய் மற்றும் அஜித் இருவரில் உங்களுக்கு யாரை பிடிக்கும் என கேட்டனர். அதற்கு கொஞ்சமும் தயங்காமல் பதிலளித்த விக்ரம் அஜித் இடம் ஸ்டைல் பிடிக்கும் விஜய்யிடம் காமெடி மற்றும் டான்ஸ் பிடிக்கும் என கூலாக பதில் சொன்னதைப் பார்த்த ரசிகர்கள் ஆரவாரத்தில் துள்ளி குதித்தனர்.


Click it and Unblock the Notifications











