அரசியல் படத்தில் எதுக்கு மேஜிக்.. பா. ரஞ்சித் பண்ணது சரியில்லை.. பாவம் விக்ரம்.. ரசிகர்கள் அட்வைஸ்!
சென்னை: சியான் விக்ரமின் நடிப்பையும் உழைப்பையும் இயக்குநர்கள் இன்னமும் சரியாக பயன்படுத்த முடியாமல் திணறுகின்றனர் என்பதற்கு பா. ரஞ்சித்தும் விதிவிலக்கு இல்லை என்பதை தங்கலான் படம் உணர்த்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சுதந்திர தினமான இன்று சியான் விக்ரம் நடிப்பில் உருவான தங்கலான் திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்று வெளியான மற்ற படங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து அதிகப்படியான ரசிகர்கள் சியான் விக்ரம் நடித்த தங்கலான் படத்தை பார்த்துள்ளனர்.

ஆனால், படத்தில் விக்ரம் கொட்டியிருக்கும் உழைப்புக்கு நீதி செய்யும் வகையில் பா. ரஞ்சித்தின் கதை மற்றும் திரைக்கதை இல்லாமல் மேஜிக் படமாக இந்த படம் ஏமாற்றி விட்டதாக பலரும் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர்.
மனுஷன் நடிப்புக்கே பார்க்கலாம்: தங்கலான் படத்தில் உண்மையிலேயே தங்கலானாகவே சியான் விக்ரம் வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு அவரது நடிப்பு மிரட்டுகிறது. அந்த கோவணம் போன்ற உடையை அணிந்துக் கொண்டு உடம்பில் அத்தனை காயங்களை வாங்கிக் கொண்டு அவர் நடித்திருக்கும் நடிப்பை தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்கள் கனவிலும் நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பார்வதிக்கு பாராட்டுகள்: ஜாக்கெட் அணியாத கங்கம்மாவாக பார்வதி நடித்திருப்பதை பார்த்தால் அல்லு நடுங்கி விட்டது. அப்படியொரு தத்ரூபமாக அவருடைய காஸ்ட்யூமை வடிவமைத்திருப்பது மற்றும் அந்த ஊர் பெண்களின் ஆடை வடிவமைத்திருப்பது பிரம்மிப்பின் உச்சம். மேலும், ரவிக்கை துணியை விக்ரம் வாங்கிக் கொடுத்த பின்னர், அதை அவர் அணிந்துக் கொண்டு வந்து நடித்துள்ள நடிப்பும், ஆரத்தியை சக்களத்தி என சொல்லும் இடத்திலும் என் கணவரையும் எங்க ஜனங்களையும் ஒண்ணும் பண்ணிடாத தாயே என வழிபடும் இடத்திலும் பாராட்டுக்களை அள்ளுகிறார்.
அரசியல் படத்தில் எதுக்கு மேஜிக்: தங்கலான் படத்தில் சியான் விக்ரமின் நடிப்பை ரசிக்கும் அளவுக்கு படத்தில் வரும் மேஜிக்கை ரசிக்க முடியவில்லை. பா. ரஞ்சித் சொல்ல வரும் அரசியலை அப்படியே வெளிப்படையாகவே பழங்குடியின மக்களின் வாழ்வியலோடு உண்மைக்கு நெருக்கமாக சொல்லாமல் கட்டுக்கதைகளை படமாக்கி ஏன் சியான் விக்ரமின் உழைப்பை வீணடிக்கிறார் என ரசிகர்கள் பா. ரஞ்சித்திடம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஃபேண்டஸி, மாயாஜாலம் எல்லாம் கமர்ஷியல் வெற்றிக்காக வைக்கப்பட்டதா? என்கிற கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











