தங்கலான் படத்துக்கு விக்ரம் பெற்ற சம்பளம் இவ்வளவுதானா?.. கோலிவுட்டில் பரவும் தகவல்
சென்னை: பா.இரஞ்சித் இயக்கத்தில் நடித்துவரும் தங்கலான் படத்துக்கு விக்ரம் பெற்றிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். பெரும் போராட்டங்களுக்கு பிறகு சேது படம் மூலம் சினிமாவில் வாழ்க்கை பெற்ற விக்ரம் மிகச்சிறந்த நடிகர் என்ற பெயரை எடுத்தவர். இருப்பினும் அவருக்கான அங்கீகாரமோ, பெரும் வெற்றியோ இன்றுவரை கிடைக்கவில்லை என்றே பெரும்பாலான ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

தொடர் தோல்விகளில் சிக்கியிருக்கும் விக்ரம்
குறிப்பாக கடந்த சில வருடங்களாக விக்ரமுக்கு சொல்லிக்கொள்ளும்படி எந்த வெற்றி படமும் அமையவில்லை. சொல்லப்போனால் விக்ரமின் கடைசி ஹிட் படம் என்னவென கேட்டால் யாருக்கும் சட்டென்று நியாபகம் வராதவகையில்தான் இருக்கிறது அவரது சமீபத்திய பயணம். பொன்னியின் செல்வன் வெற்றி படமாக கருதப்பட்டாலும் அதில் பலர் நடித்திருப்பதால் அந்த வெற்றி முழுமையாக விக்ரமுக்கு சேராது என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. அதேபோல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோப்ரா படமும் தோல்வியே அடைந்தது.

தங்கலானில் விக்ரம்
எனவே விக்ரமுக்கு உடனடியாக ஒரு வெற்றி தேவைப்படுகிறது. அதனால் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார் விக்ரம்.படத்துக்கு தங்கலான் என்று பெயரிடப்பட்டுள்ளது. அவருடன் இதில் பார்வதி உள்ளிட்டோரும் நடித்துவருகின்றனர். கோலார் தங்க வயலில் தமிழர்கள் பட்ட இன்னல்கள் குறித்து தங்கலான் படம் உருவாகிவருகிறது. படத்தின் ஷுடுடிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

தங்கலானில் இணைந்த ஹாலிவுட் நட்சத்திரம்
பா.இரஞ்சித் இயக்கும் படம் என்றால் அதில் டீட்டெயிலிங்குக்கு எந்தப் பஞ்சமும் இருக்காது என்பதால் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் விக்ரம் ரசிகர்கள். அதுமட்டுமின்றி தங்கலான் படத்தில் நடிப்பதற்கு ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோனும் கமிட்டாகியிருக்கிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தங்கலான் படத்தில் விக்ரம் பெற்றிருக்கும் சம்பளம்
இந்நிலையில் தங்கலான் படத்தில் சியான் விக்ரம் பெற்றிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி விக்ரம் இந்தப் படத்தில் நடிப்பதற்காக 28 கோடி ரூபாய் சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இத்தனை வருடங்கள் நடித்து, மிகச்சிறந்த நடிகர் என்று பெயர் எடுத்த விக்ரம் இன்னமும் 30 கோடி ரூபாய்க்குள்தான் சம்பளம் வாங்குகிறாரா என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











