For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஆதித்த கரிகாலனாக அசத்திய சியான் விக்ரம்.. பா ரஞ்சித் படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா?

  |

  சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி 100, 200, 300, 400 கோடி என ஒவ்வொரு அப்டேட்டையும் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட அதை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார் நம்ம ஆதித்த கரிகாலன் சியான் விக்ரம்.

  கோப்ரா படத்திற்கு கடுமையாக உழைத்தும் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில், கவலையில் இருந்த சியான் விக்ரமுக்கு கடைசியாக மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் கிடைத்துள்ளது.

  இந்நிலையில், அடுத்ததாக இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக உள்ள பான் இந்தியா படத்துக்கு தனது சம்பளத்தை சரசரவென உயர்த்தி உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

  பொன்னியின் செல்வன் படம் பார்த்த தமிழக ஆளுநர்... பூங்கொத்து கொடுத்து வரவேற்பு!பொன்னியின் செல்வன் படம் பார்த்த தமிழக ஆளுநர்... பூங்கொத்து கொடுத்து வரவேற்பு!

  கடும் உழைப்பாளி

  கடும் உழைப்பாளி

  படம் நல்லா இருக்கோ இல்லையே, அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது 100 சதவித உடல் உழைப்பை போட்டு விடும் நல்ல மனிதார் தான் சியான் விக்ரம். ஹிட் அடிக்க வேண்டிய பல படங்கள் மிஸ் ஆனாலும், தொடர்ந்து தனது முயற்சியை விடாப்பிடியாக செய்து வந்த அவருக்கு இந்த ஆண்டு மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படம் அமைந்தது அவரை தனிப்பட்ட முறையில் ரொம்பவே சந்தோஷப்படுத்தி உள்ளது.

  பாகுபலிக்கு பிறகு பிரபாஸ்

  பாகுபலிக்கு பிறகு பிரபாஸ்

  டோலிவுட்டில் மகேஷ் பாபு உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களையே பாகுபலி படத்திற்கு பிறகு தூக்கி சாப்பிட்டுவிட்டு நடிகர் பிரபாஸ் பான் வேர்ல்ட் ஸ்டாராகவே மாறினார். அதே போன்ற ஒரு சூழல் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு சியான் விக்ரமுக்கும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  முதல் பாக ஹீரோ

  முதல் பாக ஹீரோ

  ஆதித்த கரிகாலனாக நடித்த சியான் விக்ரம் தான் முதல் பாகத்தின் ஹீரோ என்றே சியான் விக்ரம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன்ர. போர்க் காட்சிகளில் அவர் நடித்துள்ள நடிப்பை பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர். இரண்டாவது பாகத்தில் ஆதித்த கரிகாலன் நந்தினியால் எப்படி கொல்லப்படப் போகிறார் என்பதை காணவே பார்ட் 2வுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

  அடுத்தும் பான் இந்தியா படம்

  அடுத்தும் பான் இந்தியா படம்

  கேஜிஎஃப் உண்மை கதையை மையமாக வைத்து இயக்குநர் பா. ரஞ்சித் சியான் விக்ரமை வைத்து அடுத்து இயக்க உள்ள பான் இந்தியா படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் ஆரம்பமாகிறது. சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவையே அப்படி நடிக்க வைத்த நிலையில், சியான் விக்ரமை வைத்து எப்படி விளையாடப் போகிறார் பா. ரஞ்சித் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

  அதிகரித்த சம்பளம்

  அதிகரித்த சம்பளம்

  பொன்னியின் செல்வன் படத்துக்கு வெறும் 12 கோடி ரூபாய் தான் நடிகர் விக்ரமுக்கு சம்பளமாக வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. கோப்ரா படத்துக்கு 25 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டதாக கூறுகின்றனர். இந்நிலையில், பா. ரஞ்சித்தின் பான் இந்தியா படத்துக்கு 35 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. பொன்னியின் செல்வன் படத்தின் ரீச் தான் இப்படி அவருக்கான மார்க்கெட் உலகளவில் உயர காரணம் என்றும் கூறுகின்றனர்.

  வாரிசு ஹீரோயின்

  வாரிசு ஹீரோயின்

  கேஜிஎஃப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி உடன் கோப்ரா படத்தில் நடித்த சியான் விக்ரம், பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் உடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், பா. ரஞ்சித் படத்தில் அவருக்கு ஜோடியாக வாரிசு படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா நடிக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  English summary
  Chiyaan Vikram hikes his salary for Pa Ranjith's Pan Indian movie after Ponniyin Selvan turns biggest blockbuster at the box office. Chiyaan Vikram happy for his Aadhitha Karikalan's role in Mani Ratnam's magnum opus movie Ponniyin Selvan.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X