Chiyaan Vikram - பொன்னியின் செல்வன் வாய்ப்பை நிராகரித்த விக்ரம் - பிறகு என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: Chiyaan Vikram (சியான் விக்ரம்) பொன்னியின் செல்வனில் நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை விக்ரம் முதலில் நிராகரித்த விஷயம் தெரியவந்திருக்கிறது.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் முதலில் தொடராக வந்து பிறகு புத்தகமாக வடிவம் பெற்றது. பல தலைமுறைகளாக கடந்து இன்னமும் அந்தப் புத்தகத்துக்கென்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். உண்மை சம்பவத்தையும், தனது புனைவையும் கலந்து எழுத்தில் மிகப்பெரிய மேஜிக்கை கல்கி செய்திருப்பார் என்பது பொன்னியின் செல்வனின் தீவிர ரசிகர்களுடைய கருத்து.

திரைப்படமாக்கும் முயற்சி: பொன்னியின் செல்வன் நாவல் வெளியானபோதே அதை படித்துவிட்டு அதை படமாக எடுக்க வேண்டும் என்று திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் விரும்பினர். அந்தவகையில் முதல்முறையாக எம்ஜிஆர் அந்த முயற்சியை கையில் எடுத்தார். அதற்கு மகேந்திரன் திரைக்கதை எழுதும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஆனால் என்ன காரணத்தினாலோ அந்த முயற்சி முழுதாக பலனளிக்கவில்லை.
களம் இறங்கிய கமல்: எம்ஜிஆர் நடிப்பிலிருந்து ஒதுங்கி அரசியலுக்கு சென்றுவிட, பிறகு இறந்தும்விட கமல் ஹாசன் அடுத்ததாக அந்த முயற்சியை கையில் எடுத்தார். ஆனால் எல்லா முயற்சிகளையும் சாத்தியமாக்கும் கமலால் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்கும் முயற்சியை மற்றும் நிறைவேற்ற முடியவில்லை. இருப்பினும் திரைப்படமாக உருவாக்க முடியவில்லை என்றால் என்ன டிவி தொடராக தயாரிக்கலாம் என முடிவு எடுத்தார் கமல் ஹாசன்.
சாத்தியமாக்கிய மணிரத்னம்: இப்படிப்பட்ட சூழலில் பல வருடங்கள் முயற்சிக்கு பிறகு பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக மாறியுள்ளது. இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற சூழலில் அதன் இரண்டாம் பாகம் நாளை வெளியாகவிருக்கிறது. இதனையொட்டி படத்துக்கான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
நிராகரித்த விக்ரம்: இந்நிலையில் பொன்னியின் செல்வன் புரோமோஷனில் பேசிய விக்ரம், "எம்.ஜி.ஆரிடமிருந்து 'பொன்னியின் செல்வன்' படத்தின் உரிமையைப் பெற்ற நடிகர் கமல்ஹாசன், அதனை டிவி தொடராக தயாரிக்கவிருந்தார். அதில் எந்த வேடத்தில் வேண்டுமானாலும் நடித்துக் கொள்ளுங்கள் என என்னிடம் கூறினார். ஒரு நாள் அவகாசம் எடுத்துக் கொண்ட பிறகு, சின்னத்திரையில் நடிக்க விருப்பமில்லை சொல்லிவிட்டேன்.

நடிச்சா ஹீரோதான்: வெள்ளித்திரையில் பொன்னியின் செல்வனில் நடிக்க விரும்புகிறேன். எந்த வேடத்திலும் நடித்துக்கொள்ளுங்கள் என கமல்ஹாசன் எனக்கு அனுமதியளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்க வேண்டும் என்பது எப்போதுமே எனது விருப்பமாக இருந்த ஒன்று" என தெரிவித்தார். இதனை கேட்ட ரசிகர்கள் விக்ரமின் கான்ஃபிடன்ஸ் வேற லெவலில் இருந்திருக்கிறது.
ஆரம்பத்தில் சினிமாவில் நிலைக்க கடுமையான போராட்டங்களை சந்தித்தாலும் நடித்தால் சினிமாவில் ஹீரோதான் என்று அவர் எடுத்த தீர்க்கமான முடிவுதான் அவரை இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது என புகழ்ந்து கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











