கோப்ரா கெட்டப்பிலே ஓட்டுப் போட்ட விக்ரம்.. இன்னும் யாரெல்லாம் ஓட்டுப் போட்டுருக்காங்க பாருங்க!

சென்னை: ரஜினிகாந்த், கமல், அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் என அனைத்து முன்னணி நடிகர்களும் காலையிலேயே வாக்களித்த நிலையில், நடிகர் விக்ரமும் தனது வாக்கினை செலுத்தி உள்ளார்.

Recommended Video

Chiyaan Vikram நடந்தே வந்து வாக்குபதிவு செலுத்தியுள்ளார் | Cobra, Election 2021

தேர்தல் நாளை முன்னிட்டு பல சினிமா பிரபலங்களும் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

ஓட்டுப் போட வாக்குச் சாவடிக்கு வரும் நடிகர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வாக்களித்த விக்ரம்

வாக்களித்த விக்ரம்

காலை முதலே முன்னணி நடிகர்கள் பலரும் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். நடிகர் சியான் விக்ரம் பெசண்ட் நகரில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் தனது வாக்கை செலுத்தி உள்ளார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கோப்ரா கெட்டப்பில்

கோப்ரா கெட்டப்பில்

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடித்து வரும் நடிகர் விக்ரம், அந்த படத்திற்காக நீண்ட தலைமுடியை பராமரித்து வருகிறார். இந்நிலையில், இன்று தனது வாக்கை செலுத்த வாக்குச்சாவடிக்கு அதே கெட்டப்புடன் விக்ரம் வந்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

ஓட்டுப் போட்ட ரெஜினா கசாண்ட்ரா

ஓட்டுப் போட்ட ரெஜினா கசாண்ட்ரா

சமீபத்தில் வெளியான விஷாலின் சக்ரா மற்றும் எஸ்.ஜே. சூர்யாவின் நெஞ்சம் மறப்பதில்லை என இரு படங்களிலும் தனது நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளிய நடிகை ரெஜினா கசாண்ட்ராவும் இன்று தனது வாக்கினை செலுத்தியுள்ளார். விரல் 'மை' உடன் அவர் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாக்களித்த சாந்தனு

வாக்களித்த சாந்தனு

ரஜினிகாந்த், கமல், அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, சிவக்குமார், ஷாலினி, சிவகார்த்திகேயன், அருண் விஜய், பிரபு, விக்ரம் பிரபு என ஏகப்பட்ட பிரபலங்கள் இன்று காலை முதலே தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சாந்தனுவும் தனது வாக்கை செலுத்தி விட்டு செல்ஃபி எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜே ரம்யா

விஜே ரம்யா

பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான விஜே ரம்யாவும் தனது வாக்கினை செலுத்தி உள்ளார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் டீச்சராக நடித்து ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தவர் ரம்யா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பல பிரபலங்களும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X