Chiyaan Vikram - வீடு தேடி வந்த ரசிகர்.. விஜய் போல விக்ரம் இல்லப்பா - ரசிகர்கள் கருத்து

சென்னை: Chiyaan Vikram (சியான் விக்ரம்) தங்கலான் படப்பிடிப்பில் விலா எலும்பு முறிவு ஏற்பட்ட சூழலில் தனது வீடு தேடி வந்த ரசிகருக்கு விக்ரம் கொடுத்திருக்கும் ரெஸ்பான்ஸ் பலரிடம் லைக்ஸை அள்ளியுள்ளது.

விக்ரம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். எந்த கதாபத்திரத்தை கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும் மிக சில நடிகர்களில் விக்ரம் முக்கியமானவர். ஆனால், விக்ரமுக்கு கடைசியாக எந்த ஹிட் படமும் அமையவில்லை. இதனால் அவர் கட்டாய ஹிட் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கிறார்.

Chiyaan Vikram Response to his hardcore fan

ஆதித்த கரிகாலன் விக்ரம்: விக்ரம் சோலோ ஹீரோவாக நடித்த கோப்ரா படம் அவரே எதிர்பார்க்காத தோல்வியை கொடுத்தது. இப்படிப்பட்ட சூழலில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் அவருக்கான காட்சிக்ள் குறைவாக இருந்தாலும் இரண்டாம் பாகத்தில் மொத்த படத்தையும் விக்ரமே தாங்கியிருக்கிறார். விக்ரம் மிகச்சிறந்த நடிகன் என்பதற்கு பொன்னியின் செல்வன் 2 சமீபத்திய உதாரணம் என்றும் ரசிகர்கள் தெரிவித்துவருகின்றனர்.

தங்கலான் விக்ரம்: பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களும் ஹிட் அடித்தாலும் அது விக்ரமின் ஹிட் வரிசையில் சேராது. அந்தப் படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடித்திருந்ததால் அது மல்டி ஸ்டாரர் படமாகவே கருதப்ப்டும். இப்படிப்பட்ட சூழலில் தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடிக்க கமிட்டானார் விக்ரம்.

விலா எலும்பு முறிவு: விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. அதில் விக்ரம் மற்றும் பா.இரஞ்சித்தின் அசுரத்தனமான உழைப்பை ரசிகர்கள் தெரிந்துகொண்டனர். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவந்த சூழலில் பா.இரஞ்சித் இரண்டு டூப்களை பயன்ப்டுத்த நினைத்ததாகவும், அதற்கு விக்ரம் மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. இப்படிப்பட்ட சூழலில் தங்கலான் படப்பிடிப்பின்போது விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டது.

வீடு தேடி வந்த ரசிகர்: விலா எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து விக்ரம் தற்போது ஓய்வில் இருக்கிறார். அவருக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து விக்ரம் விரைவில் குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர், இந்நிலையில் விக்ரமின் தீவிர ரசிகரான சிவா என்பவர் வீட்டுக்கு சென்று கேட்டில் நின்றுகொண்டு விக்ரம் விரைவில் குணமடைய வேண்டும் என்ற பதாகையுடன் நின்ற புகைப்படத்தை தனது ட்விட்ட பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

விக்ரமின் ரெஸ்பான்ஸ்: சிவாவின் ட்வீட்டை ரீட்வீட் செய்த விக்ரம், "மிக்க நன்றி சிவா. வீடு வரை வந்து உங்கள் அன்பை தெரிவித்ததற்க்கு. நீங்கள் எல்லோரும் என்னுடன் இருக்கும்போது எனக்கு வேறு என்ன வேண்டும் நான் மீண்டும் வருவேன்" என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

விஜய் போல விக்ரம் இல்லப்பா: அதுமட்டுமின்றி, சமீபத்தில் விஜய்யின் வீடு தேடி சென்று அவரது வீட்டு கேட் முன்பு ஒரு ரசிகை உங்களை பார்க்க வேண்டும் அண்ணா என கதறி அழுதபடி இருந்தார். ஆனால் அதற்கு விஜய் இதுவரை ரெஸ்பான்ஸ் செய்யவில்லை. அதேசமயம் தனது வீட்டுக்கு தேடி வந்த ரசிகரின் உணர்வுக்கு விக்ரம் மரியாதை கொடுத்திருக்கிறார். அதனால் விஜய் போல விக்ரம் இல்லை என சியானின் ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X