என்னது கோப்ராவை கொரோனா தாக்கிடுச்சா? கதறும் இயக்குநர்.. ரஷ்யாவில் இருந்து ரிட்டர்ன்!

சென்னை: சியான் விக்ரமின் கோப்ரா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், போன வேகத்தில் கோப்ரா படக்குழு திரும்புகிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கும் நிலையில், தைரியமாக அஜய் ஞானமுத்து, ரஷ்யாவில் படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங்கை நடத்த தனது படக்குழுவுடன் சமீபத்தில் புறப்பட்டு சென்றார்.

Recommended Video

Cobra First Look Breakdown | Vikram | 23 Years of Yuvanism

இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக ஷூட்டிங் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது கோப்ரா படக்குழு.

மிரட்டிய ஃபர்ஸ்ட் லுக்

மிரட்டிய ஃபர்ஸ்ட் லுக்

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி கோலிவுட் ரசிகர்களை மிரட்டியது. 7 வித்தியாசமான கெட்டப்பில் நடிகர் விக்ரம் அந்த ஃபர்ஸ்ட் லுக்கில் வெரைட்டி காட்டி இருந்தார்.

தைரியமா கிளம்பியது

தைரியமா கிளம்பியது

சியான் விக்ரம், கே.ஜி.எஃப் நாயகி ஸ்ரீனிதி ஷெட்டி, கிரிக்கெட் விரர் இர்ஃபான் பதான் என வித்தியாசமான கூட்டணியில் உருவாகி வரும் கோப்ரா, படத்தின் அடுத்த ஷூட்டிங்கை, ரஷ்யாவில் பிரம்மாண்டமாக நடத்த அஜய் ஞானமுத்து திட்டமிட்டு, சமீபத்தில், தைரியமாக படக்குழுவுடன் கிளம்பி சென்றிருந்தார்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் காட்டுத் தீயை விட வேகமாக பரவி வருகிறது கொரோனா வைரஸ். ரஷ்யாவில் இதுவரை 15 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ரஷ்யாவுக்கு ஷூட்டிங் சென்ற கோப்ரா படக்குழு, திட்டமிட்டபடி ஷூட்டிங் நடத்த முடியாமல் பேக்கப் செய்துள்ளது.

இயக்குநர் கதறல்

இயக்குநர் கதறல்

ரஷ்யா ஷூட்டிங் நிறுத்தப்பட்டு, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பட்ட நிலையில், கோப்ரா படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து, "கோப்ராவை கொரோனா தாக்கியது. ஷூட்டிங் நிறுத்தப்பட்டு, ரஷ்யாவில் இருந்து இந்தியா திரும்புகிறோம். போங்கய்யா.. நீங்களும் உங்க கொரோனாவும்" என கதறல் எமோஜிகளையும் சளித்துக் கொள்ளும் எமோஜிகளையும் போட்டு ட்வீட் போட்டுள்ளார்.

மே ரிலீஸ் சாத்தியமா?

மே ரிலீஸ் சாத்தியமா?

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் ஷூட்டிங் இன்னும் நிறைவடையாத நிலையில், மே மாதத்தில் கோப்ரா படத்தின் ரிலீஸ் சாத்தியமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த படமாவது விக்ரமுக்கு மிகப்பெரிய வசூல் வேட்டையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா இப்படி எமனாக மாறியுள்ளதே..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X