Cobra Twitter Review: ஒன்னு இல்லை ரெண்டு ராஜநாகம்.. எப்படி இருக்கு விக்ரமின் கோப்ரா.. ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து தான் ஒரு பிரில்லியன்ட்டான இயக்குநர் என்பதை கோப்ரா படத்தின் மூலமும் நிரூபித்துள்ளார்.

Recommended Video

Vikram Fan| என்னால தான் காசு சம்பாரிகிராங்க| *vox

கணக்கை வைத்து சுடோக்கோ போடுவது போல மூளையை கசக்கி ஒரு திரைக்கதையை உருவாக்கி அதில் நடிக்க சியான் விக்ரமை தேர்வு செய்த இடத்திலேயே அவர் பாஸ் ஆகி விட்டார்.

திரையரங்கில் ரசிகர்களை இரண்டு ராஜநாகங்கள் மிரட்டி வரும் நிலையில், கோப்ரா படம் எப்படி இருக்கு என நெட்டிசன்கள் பதிவிட்டுள்ள விமர்சனங்களை இங்கே பார்ப்போம்..

சியான் விக்ரமின் கோப்ரா

சியான் விக்ரமின் கோப்ரா

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி மற்றும் மீனாட்சி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள கோப்ரா திரைப்படம் இன்று வெளியானது. இர்ஃபான் பதான், ரோஷன் மேத்யூ என ஸ்டார் காஸ்ட்டே பிரம்மாதமாக உள்ளது. ஏன் தான் இந்த படத்தை இந்தியில் டப் செய்து வெளியிடவில்லை என்கிற கேள்வியும் ரசிகர்கள் மனங்களில் எழுந்துள்ளது. ஆலியா பட்டின் டார்லிங்ஸ் வெப்சீரிஸிலும் சமீபத்தில் ரோஷன் மேத்யூவிஸ் நடிப்பில் அசத்தி இருந்தார்.

தேசிய விருது கிடைக்கும்

தேசிய விருது கிடைக்கும்

கோப்ரா படத்தை பார்த்து விட்டு வேறலெவல் படம் என்றும், கண்டிப்பாக இந்த படம் சியான் விக்ரமுக்கு இன்னொரு தேசிய விருதை வாங்கித் தரும் என்றும் பாராட்டி உள்ளார். விக்ரமின் சினிமா வாழ்க்கையில் இன்னொரு திருப்புமுனையாக கோப்ரா நிச்சயம் இருக்கும் என்றும் இந்த நெட்டிசன் கூறியுள்ளார்.

கமலுக்கு பிறகு விக்ரம்

கமலுக்கு பிறகு விக்ரம்

கமலின் விக்ரம் படம் தமிழ் சினிமாவை தலை நிமிரச் செய்தது. அதன் பின்னர் தற்போது விக்ரமின் கோப்ரா படம் நிச்சயம் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டாக அமையும் என தெரிகிறது. கோப்ரா படத்துக்கு குவியும் பாசிட்டிவ் விமர்சனங்களால் ஹேப்பி என இந்த ரசிகர் ட்வீட் செய்துள்ளார்.

மாஸ் என்ட்ரி

மாஸ் என்ட்ரி

சியான் விக்ரமின் முதல் என்ட்ரி சீனே படு மாஸாக உள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் போட்டுள்ள பிஜிஎம் டெரிஃபிக். அதனால் தான் அவரை GOAT என கொண்டாடுகிறோம் என கோப்ரா படத்தின் அறிமுக காட்சியை பாராட்டி உள்ளார் இந்த ரசிகர்.

இன்டர்வெல் ட்விஸ்ட்

இன்டர்வெல் ட்விஸ்ட்

கோப்ரா படத்தின் இடைவேளை காட்சியில் வரும் ட்விஸ்ட் வேற லெவலில் இருக்கு. இதே போல இரண்டாம் பாதியும் சென்றால் படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட் தான். சியான் விக்ரமுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகப்பெரிய ஹிட் கிடைத்துள்ளது என இந்த நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.

நெகட்டிவ் விமர்சனங்கள்

நெகட்டிவ் விமர்சனங்கள்

கோப்ரா படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் சுமார் ரகம் தான் என்றும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. சூர்யா மற்றும் அஜித் ரசிகர்கள் தான் திட்டமிட்டு அப்படி போட்டு வருகின்றனர் என விக்ரம் ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர். சியான் விக்ரம் ரசிகர்களுக்கு ஒன்றுக்கு இரண்டு ராஜநாகங்கள் திரையில் மிகப்பெரிய ட்ரீட் கொடுத்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X