துருவ நட்சத்திரம் BGM-ல் இப்படியொரு ஸ்பெஷலா... விக்ரம் ரசிகர்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் கொடுத்த அப்டேட்

சென்னை: விக்ரம் நடிப்பில் இந்தாண்டு மூன்று திரைப்படங்கள் வெளியாவது உறுதியாகியுள்ளது.

கடந்தாண்டு மஹான், கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் விக்ரம் நடிப்பில் ரிலீஸாகின.

அதனைத் தொடர்ந்து தற்போது பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்திருந்த துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

 சீயான் விக்ரமின் லைன் அப்

சீயான் விக்ரமின் லைன் அப்

கோலிவுட்டின் டாப் ஹீரோவான சீயான் விக்ரம், தற்போது தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். பா ரஞ்சித் இயக்கும் இந்தப் படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதற்கு முன்னதாக பொன்னியின் செல்வன் 2ம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், பல வருடங்களாக கிடப்பில் கிடந்த துருவ நட்சத்திரம் திரைப்படம் தற்போது வெளியீட்டுக்கு ரெடியாகிவிட்டது.

 கோடை விடுமுறையில் ரிலீஸ்

கோடை விடுமுறையில் ரிலீஸ்

கெளதம் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு சில வருடங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. ஆனாலும் நீண்ட நாட்களாக ரிலீஸாக முடியாமல் இருந்தது. சில தினங்களுக்கு முன்னர் 'ஜான் விரைவில் உங்களை சந்திப்பார்' (John will meet you soon) என்ற கேப்ஷனுடன், துருவ நட்சத்திரம் படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. மேலும், அதில் துருவ நட்சத்திரம் ஃபைனல் ஸ்டேஜ் என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், இந்தப் படம் கோடை விடுமுறையை முன்னிட்டு மே மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

 விக்ரம் ரசிகர்கள் உற்சாகம்

விக்ரம் ரசிகர்கள் உற்சாகம்

அதன்படி, மே 19ம் தேதி துருவ நட்சத்திரம் ரிலீஸாகும் எனவும், விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து உற்சாகமான விக்ரம் ரசிகர்கள், சீயான், துருவ நட்சத்திரம் போன்ற ஹேஷ்டேக்குகளை டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஏப்ரல் 28ம் தேதி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து துருவ நட்சத்திரமும் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 பழைய பன்னீர் செல்வம்

பழைய பன்னீர் செல்வம்

முன்னதாக இந்தப் படத்திற்கு இசையமைத்து வரும் ஹாரிஸ் ஜெயராஜ், துருவ நட்சத்திரம் பிஜிஎம் 9.1.4 டால்பி இசைக் கலவையில் உருவாகி வருவதாக ட்வீட் செய்திருந்தார். விரைவில் திரையரங்குகளில் சந்திக்கிறேன் எனவும் விக்ரம் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் அப்டேட் கொடுத்திருந்தார். கெளதம் - ஹாரிஸ் கூட்டணியில் வெளியான பாடல்கள் அனைத்துமே கோலிவுட் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்டாக அமைந்தன. இப்போது ஃபீல்ட் அவுட்டில் இருக்கும் ஹாரிஸ் ஜெயராஜ், துருவ நட்சத்திரம் படம் மூலம் பழைய பன்னீர் செல்வமாக வருவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளது.

 துருவ நட்சத்திரம் ட்ரெய்லர்

துருவ நட்சத்திரம் ட்ரெய்லர்

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, சிம்ரன், பார்த்திபன், ராதிகா சரத்குமார், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஸ்பை திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படத்தில் ஜான் என்ற ரகசிய உளவாளியாக நடித்துள்ளார் விக்ரம். முன்னதாக துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யா - தீபிகா படுகோன் நடிப்பதாக 2013ம் ஆண்டில் தெரிவித்திருந்தார் கெளதம் மேனன். இந்நிலையில், தற்போது துருவ நட்சத்திரம் ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X