அடிப்பொலி.. சியான் விக்ரமின் கோப்ரா படம் எப்போ ரிலீஸ் ஆகுது தெரியுமா? வெளியானது ஹாட் அப்டேட்!

சென்னை: சியான் விக்ரமின் கோப்ரா திரைப்படம் எப்போ தான் பாஸ் வெளியாகும் என மகான் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன்பிருந்தே கேட்டுக் கொண்டிருந்த ரசிகர்கள், அந்த படம் ரிலீஸாகி 100வது நாளை கொண்டாடி வரும் நிலையில், அதற்கான பதிலை பெற்றுள்ளனர்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம், ஸ்ரீனிதி ஷெட்டி மற்றும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிப்பில் உருவாகி உள்ள கோப்ரா எந்த தேதியில் வெளியாகப் போகிறது என்பதை சூப்பரான அனிமேஷன் வீடியோவுடன் அறிவித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் படத்திற்கு முன்பாகவே கோப்ரா மூலம் இந்திய திரையுலகை ஆட்சி செய்யப் போகிறார் சியான் விக்ரம்.

ஹாலிவுட் லெவல் நடிகர்

ஹாலிவுட் லெவல் நடிகர்

தமிழ் சினிமாவில் கமல்ஹாசனுக்கு பிறகு மொத்த உடம்பையும் உருக்கி மாற்றி, விதவிதமான கெட்டப்புகளை போட்டு நடிக்கும் நடிகர் என்றால் அது சியான் விக்ரம் தான். சேது, காசி, பிதாமகன், அந்நியன், ஐ என ஹாலிவுட் நடிகர்களுக்கே சவால் விடுக்கும் அளவுக்கு நடித்து அசத்தி வரும் சியான் விக்ரம் பல வித கெட்டப்புகளை போட்டு நடித்துள்ள படம் தான் கோப்ரா.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில்

அருள்நிதியின் டிமான்டி காலனி படத்தை இயக்கி மிரட்டிய அஜய் ஞானமுத்து அடுத்ததாக விஜய்சேதுபதி, நயன்தாரா, அனுராக் காஷ்யப், அதர்வா, ராஷி கன்னா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சியான் விக்ரமை வைத்து கோப்ரா படத்தை ஆரம்பித்தார் அஜய் ஞானமுத்து. கொரோனா வைரஸ் உள்பட பல தடங்கள்கள் காரணமாக அந்த படம் ரிலீசாக நீண்ட காலதாமதம் ஆகி விட்டது.

மகான் 100 நாள்

மகான் 100 நாள்

கோப்ரா படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகன் துருவ் விக்ரம் உடன் ஓடிடி ரிலீசுக்காக விக்ரம் நடித்த குயிக்கி படமான மகான் வெளியாகி இன்றுடன் 100வது நாளை கொண்டாடி வருகிறது இந்நிலையில், விக்ரம் ரசிகர்களை மேலும், உற்சாகப்படுத்த கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளனர்.

கோப்ரா ரிலீஸ் தேதி

செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள கோப்ரா படம் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி ரிலீசாகப் போகிறது என்கிற அதிகாரப்பூர்வ வீடியோவை அசத்தலான ஒரு அனிமேஷன் வீடியோவுடன் தயாரிப்பு தரப்பு தற்போது வெளியிட்டு உள்ளது.

விக்ரம் விக்ரம் விக்ரம்

விக்ரம் விக்ரம் விக்ரம்

ஜூன் மாதம் கமலின் விக்ரம் வெளியாகிறது. ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி சியான் விக்ரமின் கோப்ரா வெளியாக போகிறது. செப்டம்பர் 30ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வெளியாகிறது. இந்த ஆண்டு முழுக்கவே விக்ரம் விக்ரம் விக்ரம் ஆண்டாக மாறப் போகிறது என்கிற மகிழ்ச்சியை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X