தலைவர் 170... விக்ரம் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா... ஜெய்பீம் பட பட்ஜெட்டை விட அதிகமா இருக்கே!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடிப்பதால், விரைவில் தலைவர் 170 ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தசெ ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிக்கும் இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக சீயான் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தில் விக்ரமின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது.

தலைவர் 170 படத்தில் விக்ரம் சம்பளம்:ஜெயிலர் படத்தில் நடித்து வந்த சூப்பர் ஸ்டார் ரஜினி, தனது போர்ஷனை முடித்துவிட்டார். அதனைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்று வந்தார். லால் சலாம் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளார்.
ஜெய்பீம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. லைகா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இன்னும் டைட்டில் கன்ஃபார்ம் ஆகவில்லை. ஆனால், ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது. தலைவர் 170 படத்தில் ரஜினி ரிட்டையர்டு போலீஸ் ஆபிஸராக நடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக சீயான் விக்ரம் நடிக்கவுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்தை முடித்துவிட்டு பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். சில தினங்களுக்கு முன்னர் தங்கலான் படப்பிடிப்பில் ஏற்பட்ட சிறு விபத்தால், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு ரெஸ்ட் எடுத்து வருகிறார் விக்ரம்.
இதனையடுத்து விரைவில் தங்கலான் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக தலைவர் 170 படத்தில் விக்ரமை வில்லனாக கமிட் செய்ய படக்குழு தீவிரம் காட்டி வருகிறதாம். அதற்காக அவருக்கு பல கோடிகளில் சம்பளம் கொடுக்கவும் லைகா நிறுவனம் ரெடியாகிவிட்டதாம். தற்போது அதுகுறித்து தகவல்கள் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதன்படி, தலைவர் 170 படத்திற்காக விக்ரமுக்கு 50 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்க படக்குழு சம்மதம் தெரிவித்துள்ளதாம். ஹீரோவுக்கு நிகரான இந்த வில்லன் கேரக்டர் விக்ரம் கேரியரில் மிகப் பெரிய டிவிஸ்ட்டாக இருக்கும் என்பதால், அவரும் ஓக்கே சொல்லிவிட்டாராம். அதனால் ஒரே பேமெண்டில் விக்ரமுக்கு 50 கோடி கொடுத்து தட்டித் தூக்கலாம் என லைகா நிறுவனம் சிக்னல் கொடுத்துவிட்டதாம்
பொன்னியின் செல்வன், தங்கலான் படங்களுக்கு விக்ரம் வாங்கிய சம்பளத்தை விடவும் இது ட்ரிபிள் மடங்கு அதிகம் என பேச்சுகள் அடிபடுகின்றன. முக்கியமாக தசெ ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் படத்தின் பட்ஜெட்டை விடவும் விக்ரம் சம்பளம் அதிகம் எனக் கூறப்படுகிறது. விக்ரமுக்கு இத்தனை கோடி சம்பளம் கொடுக்கப்படுவதால் தலைவர் 170 படம் மீதான எதிர்பார்ப்பும் தாறுமாறாக எகிறிப்போயுள்ளது. இருப்பினும் விக்ரம் சம்பளம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











