PS2: இளம் ஆதித்த கரிகாலனுக்கு சியான் விக்ரம் கொடுத்த சூப்பர் பரிசு.. சந்தோஷுக்கு என்னவொரு சந்தோஷம்!
சென்னை: பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 320 கோடி வசூலை கடந்து வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இளம் ஆதித்த கரிகாலனாக நடித்த நெஜமாவே சந்தோஷுக்கு சியான் விக்ரம் அன்பு பரிசை வழங்கி உள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமான உருவான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரம் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

குதிரை மீது ரவுண்டு அடித்தவாறே பேசும் வசனம், நந்தினியுடன் ப்ரீ கிளைமேக்ஸ் போர்ஷன் என மாஸ் காட்டி உள்ளார்.
இளம் வயது ஆதித்த கரிகாலனாக இளம் நடிகர் 'நெஜமாவே சந்தோஷ்' நடித்துள்ள நிலையில், அவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
முதல் படமே மணிரத்னம் இயக்கத்தில்: நெஜமாவே சந்தோஷுக்கு நெஜமாவே சந்தோஷம் தரும் விஷயமாக பொன்னியின் செல்வன் படத்தின் ஆடிஷனுக்கு சென்ற போது இளம் வயது ஆதித்த கரிகாலனாக நீ தான்ப்பா நடிக்கப் போற என இயக்குநர் மணிரத்னம் ஓகே சொன்னது தான்.

விஜய், அஜித், நயன்தாரா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களே இன்னமும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்காத நிலையில், இளம் நடிகரான நெஜமாவே சந்தோஷுக்கு முதல் படத்திலேயே மோதிரக் கையால் குட்டுப் பட வேண்டும் என எழுதி வைத்திருக்கிறது என சினிமா வட்டாரத்திலேயே பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
இளம் வயது ஆதித்த கரிகாலன்: ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரம் மிரட்டலான நடிப்பை ஒவ்வொரு ஃபிரேமிலும் வெளிப்படுத்திய நிலையில், இளம் வயது ஆதித்த கரிகாலனாக பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஆரம்ப காட்சிகளில் நடித்து அசத்தியவர் நடிகர் நெஜமாவே சந்தோஷ்.

இந்நிலையில், அவருக்கு நடிகர் சியான் விக்ரமிடம் இருந்து அன்பு பரிசு ஒன்று வந்துள்ளது.
அன்பு பரிசளித்த ஆதித்த கரிகாலன்: சியான் விக்ரமின் யங் வெர்ஷனாக இளம் ஆதித்த கரிகாலனாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நெஜமாவே சந்தோஷுக்கு நடிகர் விக்ரம் ஒரு பூங்கொத்தையும் சில உணவுப் பொருட்களையும் பரிசாக வழங்கி உள்ளார்.

அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம சந்தோஷத்துடன் ஷேர் செய்து தேங்க்யூ சார் என சியான் விக்ரமுக்கு நன்றி கூறியுள்ளார். சின்னத்திரை நடிகை நக்ஷத்ரா நாகேஷ் மற்றும் நடிகை குஷ்பு உள்ளிட்ட பலர் நெஜமாவே சந்தோஷை பாராட்டி கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











