ஓ போடு.. ஜெமினி இரண்டாம் பாகமா? சீயான் விக்ரம் கொடுத்த மாஸ் அப்டேட்!

சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு கதாப்பாத்திரத்திற்காக தன்னை வருத்திக்கொண்டு தத்ரூபமாக நடிப்பவர் தான் நடிகர் விக்ரம். தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை சிறந்த நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள விக்ரமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அடுத்த படத்திற்கான அப்டேட்டை கொடுத்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரமின் ஆதித்ய கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். ராவணன் படத்திற்கு பிறகு, பல ஆண்டுகள் கழித்து இருவரும் இப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளியது.

Chiyaan vikram shared mass update of his movie Gemini second part

தங்கலான்: விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். கோலார் தங்க சுரங்கத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த படத்தில் விக்ரமின் கெட்டப் முழுக்க முழுக்க வித்தியாசமாக இருக்கிறது. உலகநாயகன் கமலை போலவே விக்ரமும் சினிமாவுக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவரான விக்ரம், இந்தபடத்தில் நினைத்துக் கூட வித்தியாசமான கெட்டப்பை போட்டுள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும், இந்தபடத்தில், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல டைம்ஸ் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

சியான் 62: இந்தப் படத்தை தொடர்ந்து சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் உருவாக உள்ள சியான் 62 படத்தில் விக்ரம் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கிராமத்து கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஜெமினி 2? இந்த நிலையில் நடிகர் விக்ரம் தனது அடுத்த படம் குறித்த அப்டேட்டை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், இன்னும் சில தினங்களில் சுவாரசியமான அப்டேட்டுகள் வர உள்ளன. மறக்காம ஓ போடுங்க என பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் ஜெமினி படத்தில் வந்த ஓ போடுங்க என்று அவர் குறிப்பிட்டுள்ளதால் சூப்பர் ஹிட் படமான ஜெமினி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பாக இருக்குமா என ரசிகர்கள் ஆவருடன் கேட்டு வருகின்றனர்.

ஜெமினி: காதல் மன்னன்,அமர்க்களம், என்று அஜித்தை வைத்து மிகப் பெரிய வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் சரண் 2002-ம் ஆண்டு விக்ரமை வைத்து ஜெமினி படத்தை இயக்கினார். இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் தயாரித்தது. இந்த படத்தில் வெளிவந்த 'ஓ போடு' பாடல் பட்டி தொட்டி எல்லாம் பேமஸ் ஆகி இந்த படத்தை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றது. இந்த படத்தில் கிரண், கலாபவன் மணி, சார்லி, ரமேஷ் கண்ணா, தாமு ஆகியோர் லீட் ரோலில் நடித்திருந்தார்கள்.

வசூலை அள்ளியது: ரவுடியாக இருந்த விக்ரம், போலீஸ் ஆபிசரின் அறிவுரைப்படி திருந்தி வாழ்வதுதான் ஜெமினி படத்தின் கதை என்பதால், படத்தில் ஹீரோவுக்கான மாஸ் எப்படி இருக்குமோ அதற்கு இணையாக வில்லன் கதாபாத்திரமும் அமைக்கப்பட்டிருக்கும். வில்லனாக மலையாள நடிகர் கலாபவன் மணி தமிழில் அறிமுகமாகி நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படம் தியேட்டரில் வசூலை அள்ளியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X