விஜய்யிடம் பிடித்த விஷயம் இதுதான்..மனம் திறந்து பேசிய நடிகர் விக்ரம்!

சென்னை : நடிகர் விஜய்யிடம் எனக்கு பிடித்த விஷயம் இதுதான் என நடிகர் விக்ரம் மனம் திறந்த பேசி உள்ளார்.

Recommended Video

COBRA FDFS பார்க்க நாங்க 3 பேரும் ரெடி | Srinidhi Shetty, Mirnalini Ravi ,Meenakshi Govindarajan

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விக்ரமின் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால், இப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விக்ரம் தவிர, கே.ஜி.எஃப் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் என படத்தில் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

அஜய் ஞானமுத்து

அஜய் ஞானமுத்து

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. இந்த திரைப்படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்துள்ளார். இயக்குநர் அவதாரம் எடுத்ததில் இருந்தே தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்து வருகிறார் அஜய் ஞானமுத்து. அதனால் கோப்ராவும் நிச்சயமாக வித்தியாசமான படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஹிட்டான பாடல்

ஹிட்டான பாடல்

ரிலீஸுக்கு முன்பு படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்திருக்கிறார்கள். திருச்சி, கோவை, சென்னை, பெங்களூர், ஹைதராபாத் என்று சென்ற இடமெல்லாம் விக்ரமுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. மேலும், இப்படத்திலிருந்து வெளியான கோப்ரா...கோப்ரா பாடலுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.

ட்விட்டர் ஸ்பேஸில்

ட்விட்டர் ஸ்பேஸில்

இந்நிலையில் கோப்ரா பாடம் நாளை வெளியாக உள்ள நிலையில், கோப்ரா படம் குறித்து விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், மிருணாளினி, அஜய் ஞானமுத்து ஆகியோர் ட்விட்டர் ஸ்பேஸில் பேசினார்கள். அப்போது, தளபதி விஜய்யிடம் உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன என்று கேட்கப்பட்டது.

விஜய்யிடம் பிடித்த விஷயம்

விஜய்யிடம் பிடித்த விஷயம்

இதற்கு பதிலளித்த விக்ரம், அவர் எந்த சூழ்நிலையிலும் ரொம்ப அமைதியா இருப்பாரு அது எனக்கு பிடிக்கும். அதுமட்டுமில்லாமல் அவர் ஒரு சிறந்த நடிகர். அவருடைய டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும், எல்லாரும் நினைப்பாங்க ரிகசல் பண்ணிட்டுத்தான் இப்படி டான்ஸ் ஆடுறாருனு, ஆனால் அவர் ரிகசலே பார்க்கமாட்டாராம், அப்படியே அமைதியாக டான்சை பார்த்துட்டு ஆடுவாராம் என்று நடிகர் விஜய்யின் டான்ஸ் குறித்து வர்ணித்து நடிகர் விக்ரம் பேசி உள்ளார். இது விஜய்யின் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X