Vikram - தங்கலான் என்றால் அர்த்தம் என்ன?.. முதன்முறையாக ஓபனாக சொன்ன விக்ரம்

ஹைதராபாத்: Thangalaan Teaser (தங்கலான் டீசர்) தங்கலான் என்ற பெயருக்கு என்ன அர்த்தம் என்பது குறித்த நடிகர் விக்ரம் பேசியிருக்கிறார்.

பா.இரஞ்சித் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் இரஞ்சித் ஸ்டைலிலேயே இல்லை முகநூல் போஸ்ட்டுகளை பார்த்து கதை எழுதிவிட்டார்போல என இரஞ்சித்தை விமர்சிக்கவும் செய்தனர். குறிப்பாக துஷாரா விஜயன் ஏற்றிருந்த ரெனே கதாபாத்திரம் விமர்சனத்தை தாண்டி கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தங்கலான் படத்தில் கமிட்டானார் இரஞ்சித்.

Chiyaan Vikram Talks in Thangalaan Movie Teaser Release Event

விக்ரம் நடிக்கும் தங்கலான்: தங்கலான் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்திருக்கிறார். பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் தயாரிக்கிறார். பெரிய வெற்றி ஒன்றுக்காக பல வருடங்களாக போராடிக்கொண்டிருக்கும் விக்ரமுக்கு இந்தப் படம் நிச்சயம் அதனை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் சியானின் ரசிகர்கள்.

ஷூட்டிங் ஓவர்: ஒகேனக்கல் பகுதியில் தொடங்கிய தங்கலான் ஷூட்டிங் பல்வேறு பகுதிகளில் நடந்தது. அதன் இறுதிக்கட்ட ஷூட்டிங் மதுரையில் பத்துக்கும் மேற்பட்ட நாட்கள் நடந்தது. அதனையடுத்து படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. படமானது 2024 ஜனவரி 26ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

செம டீசர்: இந்த சூழலில் படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதனை பார்த்த ரசிகர்கள் பிரமிப்பில் வாயடைத்து போயிருக்கின்றனர். வசனம் எதுவும் இல்லாமல் காட்சிகள் மூலமே பா.இரஞ்சித் மிரட்டிவிட்டார். கண்டிப்பாக இந்தப் படம் தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளமாக இருக்கும் என ரசிகர்கள் சொல்லிவருகின்றனர்.

விக்ரம் பேச்சு: டீசர் ரிலீஸுக்கு பிறகு படத்தின் ப்ரோமோஷன் படிப்படியாக சூடுபிடித்திருக்கிறது. அதன்படி ஹைதராபாத்துக்கு விக்ரமும், பா.இரஞ்சித்தும் சென்றனர். அப்போது பேசிய விக்ரம், "தங்கலான் என்றால் தனி இல்லை. அது ஒரு பழங்குடி பெயர். இந்தப் படத்தின் வழக்கமான பாடல்களோ, சண்டை காட்சிகளோ, சினிமாத்தனமான கிளாமரோ இருக்காது.

சிரமம்: படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு அதிக வசனங்கள் எதுவும் இல்லை. லைவ் சவுண்டிங்கில் படம் செய்ததால் புதிய அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் மேக்கப் போட 3 மணி நேரம் ஆகும். இரஞ்சித் தொடர்ந்து அர்த்தமான படங்களை உருவாக்குகிறார். இந்தப் படம் மூலம் ரசிகர்களை அவர் புதிய உலகத்துக்குள் அழைத்து செல்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X