போட்ரா வெடிய.. விக்ரம் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. தங்கலான் அப்டேட்!
சென்னை : நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு தங்கலான் படத்தின் முக்கியமான அப்டேட்டை படக்குழு நாளை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
சியான் விக்ரமிற்கு என்று ரசிகர்கள் மனதில் தனி இடம் உண்டு. நடிகர் கமல் எப்படி தனது கதாபாத்திரத்திற்காக மெனக்கெடுகிறாரோ அதைப்போல விக்ரமும் தனது கதாபாத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்.

தன்னுடைய கடுமையான உழைப்பினால் தனெக்கென ஒரு முத்திரையை பதித்த விக்ரம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
நடிகர் விக்ரம் : கோப்ரா படத்தில் 8 கெட்டப்புகளை போட்டு அசத்திய விக்ரம், பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்தகரிகாலனாக மிரட்டி இருந்தார். ஆதித்த கரிகாலனின் கதாபாத்திரம் விக்ரமிற்கு பக்காவாக பொருத்தி இருந்தது. குறிப்பாக சோழா...சோழா... பாடலில் விக்ரமின் டான்ஸ்சை பார்த்து உச்சு கொட்டாதவர்களே இல்லை என்று சொல்லாம்.
உண்மைக்கதை : பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் விக்ரம் இணைந்துள்ள புதிய படத்திற்கு தங்கலான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்டூடியோ கிரீன்ஸ் மற்றும் நீலம் படத் தயாரிப்புக் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளது. சுதந்திரத்திற்கு முந்தைய 18ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது.

முன்னணி நடிகர்கள் : பசுபதி, மாளவிகா மோகனன் உட்பட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். ப்ரீயட் படமாக இப்படத்தின் படப்பிடிப்பு கேஜிஎஃப், கடப்பா, சென்னை உள்ளிட்ட இடங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
தரமான அப்டேட்: இந்நிலையில் நடிகர் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 17ம் தேதியான நாளை தரமான அப்டேட் ஒன்றை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான போஸ்டரையும் தங்கலான் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இதன் படி நாளை காலை சரியாக 09:05 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பா ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











