பா ரஞ்சித்தை பயமுறுத்திய ரஜினி.. தங்கலான் ரிலீஸ் தள்ளிப்போகிறதா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை: பொங்கலுக்கு வெளியாக இருந்த தங்கலான் திரைப்படம் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவைத் தாண்டி இந்திய சினிமா எதிர் பார்த்துக்கொண்டு இருக்கும் திரைப்படம் தங்கலான். இந்த படத்தின் மீதான கூடுதல் ஹைப்புக்கு காரணம் விக்ரமும் ரஞ்சித்தும் கூட்டணி அமைத்துள்ளது தான்.

இப்படம் கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டு வருகிறது.
விக்ரமின் தங்கலான்: இயக்குநர் பா ரஞ்சித் எடுக்கும் ஒவ்வொரு திரைப்படமும் மாஸ்டர் பீஸ் திரைப்படங்களாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த வரிசையில் தங்கலான் திரைப்படமும் இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. விக்ரமின் திரைப்பயணத்தில் இந்த திரைப்படம் முக்கியமான படமாக இருக்கும்.

பல கோடி செலவில்: ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், பசுபதி, மாளவிகா மோகனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். ப்ரீயட் படமான இப்படத்தின் படப்பிடிப்பு கேஜிஎஃப், கடப்பா, சென்னை உள்ளிட்ட இடங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வந்தன. படப்பிடிப்பின்போது நடிகர் விக்ரமின் விலா எலும்பில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் சென்னையில் படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு பின்னர் படப்பிடிப்பு தொடங்கி முடிந்தது.
ரிலீஸ் தள்ளிப்போகிறதா? :தொடர்ச்சியாக சமூக நீதி பேசும் படங்களை இயக்கி வரும் பா. ரஞ்சித்தின் தங்கலான் படம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அது தள்ளிப்போய் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லால் சலாம், அரண்மனை 4, அயலான் போன்ற படங்கள் வெளியாக உள்ளதால், தங்கலான் படம் பொங்கல் போட்டியில் இருந்து விலகி உள்ளது. ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால், அது இந்த படத்தை பாதிக்கும் என கருதி படக்குழு இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

சாட்டிலைட் உரிமை: தங்கலான் படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று ரூபாய் 35 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. ஆனால், முன்னணி சேனல் ஒன்று படத்தை பார்த்துவிட்டு இன்னும் சாட்டிலைட் உரிமையை வாங்காமல் காத்திருக்க வைத்து இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. மிகப்பெரிய படத்திற்கே இந்த நிலைமையா என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











