‘தங்கலான்‘மிரட்டலான லுக்கில் சியான் விக்ரம்...கனவு நிறைவேறியது..நன்றி கூறிய நடிகர்!
சென்னை : சியான் விக்ரம் பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் தங்கலான் படத்தில் நடித்ததன் மூலம் என் கனவு நிறைவேறிவிட்டதாக நடிகர் ட்விட்டரில் உருகியுள்ளார்.
சியான் விக்ரமிற்கு என்று ரசிகர்கள் மனதில் தனி இடம் உண்டு. நடிகர் கமல் எப்படி தனது கதாபாத்திரத்திற்காக மெனக்கெடுகிறாரோ அதைப்போல விக்ரமும் தனது கதாபாத்திற்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்.
தன்னுடைய கடும் உழைப்பினால் தனெக்கென ஒரு முத்திரையை பதித்துள்ள விக்ரம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து இருக்கிறார்.

சீயான் விக்ரம்
விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான கோப்ரா திரைப்படத்தில் 8 கெட்டப்புகளை போட்டு அசத்தி இருப்பார். வித்தியாசமான கதை அம்சம் கொண்ட இந்த திரைப்படத்திற்கு முதல் நாளே பல நெகடிவ் விமர்சனம் எழுந்ததால் படம் தோல்வியைத் தழுவியது. இரண்டு ஆண்டுக்கும் மேலாக கோப்ரா படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் படம் தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

சோழா...சோழா...
இதனை அடுத்து விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியாக பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்தகரிகாலனாக கலக்கி இருந்தார். ஆதித்த கரிகாலனின் கதாபாத்திரம் விக்ரமிற்கு பக்காவாக பொருத்தி இருந்தது. குறிப்பாக சோழா...சோழா... பாடலில் விக்ரமின் டான்ஸ்சை பார்த்து வாவ்.. என்று சொல்லாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிக்கு அழகாக ஆடி இருப்பார் விக்ரம்.

தங்கலான்
இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் விக்ரம் இணையும் புதிய படத்திற்கு தங்கலான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்டூடியோ கிரீன்ஸ் மற்றும் நீலம் படத் தயாரிப்புக் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. பசுபதி, மாளவிகா மோகனன் உட்பட பலர் நடித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

டிராண்டாகும் புகைப்படம்
இந்த படத்தின் 54 நொடிகள் ஓடக்கூடிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் விக்ரமின் மிரட்டலான நடை,உடை என அனைத்தையும் பார்த்து வியந்து போன ரசிகர்கள் விக்ரமின் போட்டோவை டிராண்டாக்கி வருகின்றனர். முதல்முறையாக இரஞ்சித்தும் விக்ரமும் இணைந்திருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு பன்மடங்காக அதிகரித்துள்ளது.

நன்றி அண்ணா
இந்நிலையில், இந்த படத்தில் நடித்துள்ள அர்ஜுன் பிரபாகரன் என்ற நடிகர், விக்ரமனின் புகைப்படத்தை பகிர்ந்து, விக்ரமுடன் இந்த படத்தில் நடித்ததை நினைத்து பெருமை அடைகிறேன், இந்த கனவை நிறைவேற்றிய இயக்குநருக்கு நன்றி என தெரிவித்துள்ளார். நடிகர் அர்ஜுன் பிரபாகரன், பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான நட்சத்திரம் நகர்கிறது படத்திலும் நடித்துள்


Click it and Unblock the Notifications











