ஜான் இஸ் கம்மிங்.. வேட்டையாட துவங்கும் விக்ரம்.. விரைவில் துருவ நட்சத்திரம் டப்பிங் ஸ்டார்ட்!

சென்னை: சியான் விக்ரம் ரசிகர்களுக்கு இன்ப செய்திகள் தினமும் லைன் கட்டி காத்திருக்கின்றன.

மகன் த்ருவ் விக்ரமுடன் இணைந்து விக்ரம் நடிக்கும் 'சியான் 60' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது அடுத்த ஹேப்பி நியூஸாக துருவ நட்சத்திரம் படம் குறித்த ஹாட் அப்டேட் கிடைத்திருக்கிறது.

கெளதம் வாசுதேவ் மேனன் ஒரு பக்கம் செம ஆக்டிவாக இயங்கி வரும் நிலையில், விரைவில் துருவ நட்சத்திரம் படத்தின் டப்பிங் நடக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜான் இஸ் கம்மிங்!

ஜான் இஸ் கம்மிங்!

வாத்தி கம்மிங்குக்கு எப்படி ரசிகர்கள் காத்திருக்கின்றனரோ அதே போல துருவ நட்சத்திரம் ஜான் வருகைக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள் வெகு காலமாக காத்திருக்கின்றனர். கெளதம் மேனன் இயக்கத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன், டிடி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் அந்த படம் விரைவில் ரிலீசுக்கு ரெடியாகுதாம்.

லாஸ்ட் ஷெட்யூல்

லாஸ்ட் ஷெட்யூல்

கெளதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம் படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விக்ரம் நடிப்பில் லாஸ்ட் ஷெட்யூல் மட்டுமே எடுக்க வேண்டி இருப்பதாகவும், இந்த லாக்டவுனில் எடிட்டிங் உள்ளிட்ட பணிகள் தற்போது அசுர வேகத்தில் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

சியான் டப்பிங்

சியான் டப்பிங்

மாஸ்டர் படத்தின் டப்பிங் பணிகள், குருதி ஆட்டத்தின் டப்பிங் பணிகள் உள்பட பல்வேறு படங்களின் டப்பிங் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவுபெற்றுள்ள நிலையில், சீக்கிரமே துருவ நட்சத்திரம் படத்தின் டப்பிங்கை சியான் விக்ரம் தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சந்தோஷமான செய்தி விக்ரம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது.

கார்த்திக் டயல் செய்த எண்

கார்த்திக் டயல் செய்த எண்

ஒன்றாக என்டர்டெயின்மென்ட்டை ஆரம்பித்து, தயாரிப்பு பணிகளில் ஈடுபட்ட கெளதம் மேனனுக்கு கடன் தொல்லைகளால் பலத்த அடி விழுந்தது. தற்போது அதில் இருந்து முழுதாக மீண்டெழுந்துள்ள அவர், இந்த லாக்டவுனில் சிம்பு, திரிஷாவை வைத்து விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகம் போல ‘கார்த்திக் டயல் செய்த எண்' என்ற லாக்டவுன் ஷார்ட் ஃபிலிமை இயக்கி அசத்தி உள்ளார்.

மொட்டை மாடி நடனம்

மொட்டை மாடி நடனம்

அந்த குறும்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது நடிகர் சாந்தனு பாக்யராஜ் மற்றும் மேகா ஆகாஷ் நடிப்பில் ஒரு அழகான ரொமான்டிக் லாக்டவுன் பாடலையும் கெளதம் மேன இயக்கி உள்ளார். ஒரு சான்ஸ் கொடு என்ற பெயரில் வெளியாகி உள்ள அந்த பாடலுக்கு சாந்தனு போட்டுள்ள மொட்டை மாடி நடனம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சூர்யாவுக்காக

சூர்யாவுக்காக

கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தில் சிம்பு எழுதும் ஸ்க்ரிப்டில் வரும் கமல், காதம்பரி பெயர்கள் அடுத்ததாக சூர்யாவுக்காக கெளதம் வாசுதேவ் மேனன் உருவாக்கி வைத்துள்ள இசைக் கதைக்கான ஸ்க்ரிப்ட் தான். அருவா, வாடிவால் என பிசியாக இருக்கும் சூர்யா, கெளதம் மேனன் இயக்கத்தில் சீக்கிரம் நடிக்க சம்மதிப்பார் என்றே கோலிவுட் வட்டாரங்கள் எதிர்பார்த்து கெளதம் மேனனை போல காத்திருக்கின்றன.

மொரட்டு கேங்ஸ்டர்

மொரட்டு கேங்ஸ்டர்

அப்பா எடுத்த துப்பாக்கியை இறுதியாக மகன் எடுப்பதாக ‘சியான் 60' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அந்த படத்தின் கதையும் அதே போல இருக்குமா? அல்லது வேறு படுமா என்பதை டீசர் அல்லது டிரைலர் வெளியானாதால் தான் கூற முடியும். மகனுடன் இணைந்து நடிக்கும் படத்திற்காக தயாராகி வரும் விக்ரம், கெளதம் மேனனின் படத்துக்கும் கொஞ்ச ஷெட்யூலை ஒதுக்குவார் என்றே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X