முட்டித் தெரிய கவர்ச்சி போஸ்.. மாளவிகா மோகனனுக்காக போட்டோகிராஃபர் ஆன சியான் விக்ரம்!
சென்னை: ஹாட் மாடலாக கோலிவுட்டில் வலம் வரும் நடிகை மாளவிகா மோகனனை படு கவர்ச்சியாக போட்டோ எடுக்கும் அந்த போட்டோகிராஃபர் கொடுத்து வச்சவர் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வரும் நிலையில், அப்படியொரு அதிர்ஷ்டசாலியாக சியான் விக்ரமே மாறியுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
மலையாள நடிகையான மாளவிகா மோகனன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக கோலிவுட்டில் அறிமுகமானார்.
தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்த மாளவிகா மோகனன், தனுஷின் மாறன் படத்தைத் தொடர்ந்து தற்போது சியான் விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

பா. ரஞ்சித் இயக்கத்தில்
அட்டகத்தி படம் மூலம் இயக்குநரான பா. ரஞ்சித் மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக மாறி உள்ளார். பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக மலையாள நடிகைகளான பார்வதி மற்றும் மாளவிகா மோகனன் இருவரும் நடித்து வருகின்றனர். பீரியட் படமாக உருவாகி வரும் இந்த படத்துக்காக இரண்டு நடிகைகளும் அப்போகலிப்டோ ஸ்டைலில் கெட்டப் போட்டு நடித்து வருகின்றனர்.

மாஸ்டர் படத்துக்கு பிறகு
பேட்ட படத்தில் வயதான கெட்டப்பில் நடித்த மாளவிகா மோகனன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக செம அழகாக சேலை அணிந்து டீச்சராக நடித்திருந்தார். அந்த படம் கொடுத்த ஹைப் காரணமாக தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு மாளவிகா மோகனனுக்கு கிடைத்துள்ளது.

செம கவர்ச்சியாக
சினிமாவில் மாளவிகா மோகனனின் நடிப்பு பெரிதளவில் ரசிகர்களை இதுவரை கவரவில்லை என்றாலும், அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் ஹாட் போட்டோக்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். பிகினி உடைகளில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து கோடை வெயிலை முன் கூட்டியே கொண்டு வந்து விடுகிறார் மாளவிகா மோகனன்.

பிகினி உடையில் நீச்சல்
சமீபத்தில் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் மீனாக நீந்தும் அண்டர்வாட்டர் போட்டோவை போட்டு ரசிகர்களை ஜூம் போட வைத்து ஜொள்ளு விட வைத்திருந்தார் மாளவிகா மோகனன். இந்நிலையில், தற்போது லேட்டஸ்ட்டாக ஒரு போட்டோவை போட்டு அதற்கு அவர் கொடுத்த கேப்ஷனும் ரசிகர்கள் கவனத்தை கவர்ந்துள்ளது.

முட்டித் தெரிய போஸ்
கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு முட்டித் தெரிய போஸ் கொடுத்த ஹாட் போட்டோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன். மேலும், தனது கேப்ஷனில் அந்த போட்டோவை யார் எடுத்தார் என அவர் சொல்லி இருப்பது தான் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

போட்டோகிராஃபரான சியான்
மாளவிகா மோகனன் முட்டித் தெரிய போஸ் கொடுத்து உள்ள போட்டோவை நடிகர் சியான் விக்ரம் தான் எடுத்தார் என தங்கலான் நாயகி கேப்ஷன் கொடுத்துள்ள நிலையில், விக்ரம் ரசிகர்கள் சியானுக்குள் இப்படியொரு திறமை இருக்கா என கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











