Chiyaan Vikram - சியான் விக்ரம் வாட்சே இவ்வளவு விலையா?.. வாய் பிளந்த ரசிகர்கள்
சென்னை: Chiyaan vikram (சியான் விக்ரம்) பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரோமோஷனுக்கு விக்ரம் கட்டிவந்த வாட்ச்சின் விலை குறித்து வெளியான தகவலை பார்த்து ரசிகர்கள் வாய் பிளந்திருக்கின்றனர்.
விக்ரம் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். முன்னணி நடிகர் மட்டுமின்றி மிகச்சிறந்த நடிகர் என்ற பெயரையும் அவர் பெற்றவர். ஆரம்பத்தில் ரொம்பவே போராட்டங்களை சந்தித்த விக்ரமுக்கு சேது படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதனையடுத்து தொட்டதெல்லாம் ஹிட்டாக கமர்ஷியல் படம், கலை படம் என்ற இரட்டை குதிரையில் சவாரி செய்து தற்போதைய நிலைக்கு அவர் உயர்ந்திருக்கிறார்.

வெற்றிக்கு காத்திருக்கும் விக்ரம்: விக்ரம் சமீபத்தில் நடித்த படங்கள் தோல்வியையே சந்தித்தன. பொன்னியின் செல்வன் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி மணிரத்னம் என்ற இயக்குநருக்கும், பொன்னியின் செல்வன் என்ற படத்துக்கும்தான் சொந்தம் என்றே கருதப்படுகிறது.எனவே பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் தங்கலான் படத்தை மிகவும் நம்பிக்கொண்டிருக்கிறார் விக்ரம். அந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொடுக்கும் என்பது உறுதி என மேக்கிங் வீடியோவை பார்த்த ரசிகர்கள் கூறுகின்றனர்.
பொன்னியின் செல்வன் 2: விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் பாகம் பெரும் வரவேற்பை பெற்றதோடு விக்ரமின் நடிப்பும் பெரிதாக பேசப்பட்டது. இதன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் பாகமும் முதல் பாகம் போலவே மெகா ஹிட்டாகி வசூல் மழையை பொழியும் என ரசிகர்களும், படக்குழுவினரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
புரோமோஷனில் பிஸி: படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே இருக்கிறது. இதனையொட்டி படத்துக்கான புரோமோஷன் பணிகள் சூடுபிடித்துள்ளன. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, சோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டிருக்கின்றனர். இந்தியாவின் மும்பை, டெல்லி, கோவா, தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் உள்ளிட்ட ஊர்களுக்கு இவர்கள் தனி விமானம் மூலம் சென்று படத்தின் புரோமோஷனில் கலந்துகொண்டனர்.

கொச்சியில் சோழர்கள்: புரோமோஷனின் ஒரு பகுதியாக நேற்று இவர்கள் அனைவரும் கொச்சிக்கு சென்றனர். அங்கு படம் குறித்து பல்வேறு விஷயங்களை பேசினர். அந்த கையோடு விக்ரமை வைத்து ஒரு ஃபோட்டோஷூட்டும் நடத்தப்பட்டது. தங்கலானுக்கு வளர்த்திருக்கும் முடி மற்றும் தாடியோடு ஊதா கலர் சட்டையும் பேண்ட்டும் அணிந்திருந்தார் விக்ரம். அந்தப் புகைப்படங்கள் ட்ரெண்டானாலும் அவர் அணிந்திருந்த வாட்ச்சின் விலை தற்போது ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளது.
ஸ்விட்சர்லாந்து வாட்ச்: அதாவது, விக்ரம் கட்டியிருந்த வாட்ச் ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஹியூப்லோட் என்கிற பிராண்ட். big bang meca-10 என்கிற வெர்ஷனை சேர்ந்த அந்த வாட்ச்சின் விலை இந்திய மதிப்பில் சுமார் 21 லட்சத்து 29 ஆயிரத்து 700 ரூபாய். இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன பார்க்க சும்மா லெதர் வாட்ச் மாதிரி இருக்கு ஆனால் இவ்வளவு காஸ்ட்லியாக இருக்கிறதே என பிளந்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











