ஷங்கர் படம் பண்ணியாச்சு.. மணிரத்னம் படமும் பண்ணியாச்சு.. அடுத்து ராஜமெளலி படத்தில் சியான் விக்ரம்?
சென்னை: சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாகிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சியான் விக்ரமின் நடிப்பு நிச்சயம் உலக ரசிகர்களை பிரம்மிக்க வைக்கும் என படக்குழுவினர் நேற்று நடைபெற்ற தங்கலான் இசை வெளியீட்டு விழாவின் கூறியுள்ளனர்.
ஷங்கர், மணிரத்னம் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள் படங்களில் நடித்துள்ள சியான் விக்ரம் அடுத்ததாக ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்கலான் படத்தின் ஹைதராபாத் புரமோஷனின் போது சியான் விக்ரம் இது தொடர்பாக பேசியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்நியன், ஐ: ஷங்கர் இயக்கத்தில் அந்நியன் படத்தில் சியான் விக்ரம் நடித்து மிரட்டியதை ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்துவிட மாட்டார்கள். அதைப்போல ஐ படத்திலும் தனது உடல் பொருள் ஆவியை கொடுத்து விக்ரம் நடித்ததை பலரும் பாராட்டினார்கள். ஷங்கரை தொடர்ந்து ராஜமெளலி இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்த நிலையில், விரைவில் அது நிறைவேறும் என தெரிகிறது.
மணிரத்னம் இயக்கத்தில்: மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ராவணன் மற்றும் பொன்னியின் செல்வன் படங்களில் சியான் விக்ரம் நடித்துள்ளார். ராவணன் படத்தில் தமிழ் மற்றும் இந்தியிலும் நடித்திருந்தார். பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்து கதைகளில் படித்த அந்த கதாபாத்திரத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருந்தார் சியான் விக்ரம்.
ராஜமெளலி இயக்கத்தில்: ராஜமௌலி அடுத்ததாக மகேஷ்பாபுவை வைத்து உருவாக்க உள்ள பிரம்மாண்ட படத்தில் சியான் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் நடைபெற்ற தங்கலான் இசை வெளியீட்டு விழாவில், ராஜமெளலி என்னுடைய நல்ல நண்பர் என்றும் வெகுநாட்களாகவே அவர் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார். ஆனால், எந்த படம் என்பது இன்னமும் முடிவாகவில்லை. விரைவில், ஒரு படத்தில் இணைவோம் எனக்கூறியுள்ளார். விக்ரம் இப்படி பேசியதும், அது கண்டிப்பாக மகேஷ் பாபு படத்தில் தான் என்று ரசிகர்கள் கெஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











