வீர தீர சூரன் டிரைலர் வெளியானது.. சம்பவம் செய்த விக்ரம்.. தெறிக்கவிட்ட எஸ்.ஜே.சூர்யா!

சென்னை: இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் 2 திரைப்படம் வரும் 27ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில், இப்படத்தின் டிரெய்லரை படக்குழு சற்று முன் வெளியிட்டது.

பண்ணையாரும் பத்மினியும்', 'சித்தா' படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அருண்குமார் இயக்கியுள்ள திரைப்படம் தான் 'வீர தீர சூரன்'. விக்ரமின் 62வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சரமூடு என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் கல்லூரி பாடலும், டீசரும் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது.

Veera Dheera Sooran trailer Chiyaan Vikram

வீர தீர சூரன் டிரைலர்: இந்நிலையில், டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று வேல் டெக் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அபிஷேக் மற்றும் தொகுப்பாளி கிகி ஆகியோர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். சற்று முன் வெளியான அந்த டிரைலரில் ஒரு கூட்டமே விக்ரமைத் தேட, முரட்டுத்தனமாத களத்தில் குதித்து அனைவரையும் வெட்டி சாய்கிறார். மேலும்,ஜிவி பிரகாஷின் இசை சும்மா தரமாக உள்ளது.

Veera Dheera Sooran trailer Chiyaan Vikram
முதலில் வரும் இரண்டாம் பாகம்: வீரதீர சூரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய, கிகி, இந்த திரைப்படத்தில் இரண்டாம் பாகம் என்று சொன்னதும். அனைவரும் இரண்டாம் பாகமா என குழப்பம் அடைந்தார்கள். இதில், சுவாரசியமான விஷயம் என்னவென்றால், வழக்கமாக படத்தில் முதல் பகுதி வெளியிடப்பட்டு அதன் பிறகு தான் இரண்டாம் பாகம் வெளியிடப்படும், ஆனால், இந்த திரைப்படத்தில் ஒரு புதுமையை செய்து இருக்கிறார் இயக்குனர் அருண்குமார். அதாவது, படத்தில் இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிடப்பட்டு அதன் பிறகு தான் முதல் பாகமே வெளியாகிறது. இது தமிழ் சினிமா வரலாற்றிலேயே, ஏன் இந்திய சினிமா வரலாற்றிலேயே யாரும் செய்யாத ஒன்று. இதனால், கோலிவுட்டிற்கே பெருமை சேர்க்கும் விஷயம் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய எஸ்ஜே சூர்யா, வீர தீரசூரன் திரைப்படத்தை அருண்குமார் வேறு விதமாக கொடுத்து இருக்கிறார். ஒரு ஆங்கில படத்தை தமிழ் மண்ணில் எடுக்கப்பட்ட ஒரு தமிழ் படம், படம் 27ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. அந்த படத்தைபார்த்துவிட்டு படம் எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X