காரணம் இல்லாமல் இல்லை.. டிரெண்டாகும் #ChiyaanVikramForeverக்கு இப்படியொரு காரணம் இருக்கு!
சென்னை: சியான் விக்ரம் ரசிகர்கள் சத்தமே இல்லாமல் இன்று திடீரென #ChiyaanVikramForever என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
Recommended Video
கடந்த ஏப்ரல் 17ம் தேதி சியான் விக்ரமின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பிறந்த நாளை முன்னிட்டு கோப்ரா பட இயக்குநர் முதல் நாளே வெளியிட்ட காமன் டிபி ஹாஷ்டேக் டிரெண்டானது.
அதற்கு முன்னதாக சினிமாவில் இருந்து விலகப் போகிறார் விக்ரம் என்ற வதந்தி வைரஸ் கிளம்ப, கொதித்தெழுந்த சியான் ரசிகர்கள் ட்விட்டர் குருவியின் சிறகு முறியும் அளவுக்கு டிரெண்ட் செய்தனர்.

திடீர் டிரெண்டிங்
முழு ஊரடங்கு அறிவித்த உடன் மக்கள் எப்படி கூட்டம் கூட்டமாக கடைகளுக்கு அலைமோதி சென்றனரோ அதே போல, இந்த #ChiyaanVikramForever என்ற ஹாஷ்டேக் வந்ததை அறிந்த சியான் ரசிகர்கள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி இந்த ஹாஷ்டேக்கை இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அந்நியன் ஒளிபரப்பு
வரும் ஞாயிற்றுக் கிழமை சன் டிவியில் ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன் படம் ஒளிபரப்பப் போவதாக அறிவித்துள்ளனர். அம்பி, ரெமோ, அந்நியன் என மூன்று கெட்டப்புகளில் மல்டிபிள் பெர்சனாலிட்டி டிசார்டர் கதாபாத்திரத்தில் விக்ரம் மொத்த வித்தையும் இறக்கியிருப்பார்.

அந்த சிரிப்பு
சியான் விக்ரமின் அந்த கள்ளமில்லாத சிரிப்பு ஒன்றே போதும், ரசிகர்களுக்கு செம போதை தரும் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தை கதறவிட்டு வருகின்றனர். 30 ஆயிரத்தை தாண்டிய ரசிகர்கள் கூட்டம் 50 ஆயிரத்தை நெருங்காமல் விட மாட்டோம் என்கிற வெறித்தனத்தோடு ரசிகர்கள் ரீட்வீட்களை அடித்து நொறுக்குகின்றனர்.

அரக்கன்
சேது, காசி, பிதாமகன், தெய்வத்திருமகள், ராவணன், அந்நியன், ஐ என வித்தியாசமாக மிரட்டுவதாகட்டும், தில், தூள், ஜெமினி, சாமி, ஸ்கெட்ச் என ஸ்டைலாக மாஸ் காட்டுவதாகட்டும், எல்லாமே சியான் விக்ரமுக்கு அசால்ட்டான மேட்டர் தான். தமிழ் சினிமாவின் நடிப்பு அரக்கனாக வலம் வரும் சியான் விக்ரம் கோப்ரா, பொன்னியின் செல்வன், மகாவீர் கர்ணன் என அடுத்தடுத்த படைப்புகளையும் கொடுக்க காத்திருக்கிறார்.

இதுதான் காரணம்
என்னடா திடீர்னு இந்த ஹாஷ்டேக் டிரெண்டாகுதே, சியான் விக்ரம் பிறந்தநாளும் சமீபத்தில் தானே முடிந்தது. வேறு என்னவாக இருக்கும் என டிரெண்டாகும் ஹாஷ்டேக்குக்குள் ஊடுருவி பார்த்ததில் அதற்கான காரணம் கிடைத்திருக்கிறது. சியான் விக்ரமின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தங்களின் ரசிகர்கள் பலத்தை பெருக்கிக் கொள்ள இப்படியொரு டிரெண்டை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











