ரசிகர்களின் பாராட்டை பெற்ற ‘சியான்கள்‘..நிச்சயம் பல விருதுகளை வெல்லும்!

சென்னை: வைகறை பாலன் இயக்கத்தில் கரிகாலன், ரிஷா , நளினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள படம் சியான்கள்.

இந்த படத்தை கரிகாலன் தயாரித்து முன்னணியில் நடித்துள்ளார். முத்தமிழ் இசை அமைத்துள்ளார்.

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியான இந்த படம் தொடர்ந்து ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளி வருகிறது.

7 முதியவர்கள்

7 முதியவர்கள்

தென்மாவட்டங்களில் தாத்தாக்களை சியான்கள் என அழைப்பர். 7 தாத்தாக்களின் கதை தான் இந்த சியான்கள். இந்த 7 பேரும் அவர்களின் குடும்பத்தால் வெறுக்கப்பட அவர்களில் இருவர் இறந்த போக மீதம் உள்ள சியான்கள் தங்களுடைய ஆசையை நிறைவேற்ற நினைக்கின்றனர். அவரவர்களின் ஆசை நிறைவேறியதா இல்லையா என்பது தான் சியான்கள் படத்தின் மீதிக் கதை.

அழகான காதல்

அழகான காதல்

இந்த 7 சியான்களில் பிரபல நடிகர் நளினிகாந்த் மட்டும் தெரிந்த முகமாக உள்ளார். அவரும், மற்ற 6 சியான்களும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அந்த கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளனர். இந்த கதையில் கரிகாலன் - ரிஷா இடையில் அழகான காதல் கதையும் வைத்துள்ளார் இயக்குனர். கரிகாலன் இயல்பாக நடிக்க முயற்சித்துள்ளார், ரிஷாவும் தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக அளித்துள்ளார்.

எதார்த்தமான படைப்பு

எதார்த்தமான படைப்பு

ரிலீசுக்கு முன்னரே சியான்கள் திரைப்படம் சில திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் வென்றது. எதார்த்தமான படைப்பாக கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம் அதுவும் நம் மண் சார்ந்த கதைக்களம். இது போன்ற சிறப்பம்சங்கள் கொண்ட சியான்கள் திரைப்படம் மேலும் பல விருதுகளை வெல்லும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களின் பாராட்டில்

ரசிகர்களின் பாராட்டில்

முதியோர்கள் அனைவருமே போற்றிப் பாதுகாக்க வேண்டும் என கூறும் இயக்குனர், முத்தமிழ் பின்னிணி இசை, பாபுகுமார் ஒளிப்பதிவு, ரவீஸ் அரங்க அமைப்பு, கதிரவன் ஆடை வடிவமைப்பு இந்த எதார்த்தமான படைப்பிற்கு கூடுதல் சிறப்பை சேர்த்துள்ளது. தொடர்ந்து ரசிகர்களின் பாராட்டில் குறிப்பாக முதியவர்களின் பாராட்டு மழையில் சியான்கள் திரைப்படம் நனைந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X