twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஸ்வரூபம் படத்தின் மீது அரசு விதித்துள்ள தடை சரியானதுதான்- சோ

    By Shankar
    |

    Cho
    சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையில் எந்தத் தவறும் இல்லை. சரியான முடிவுதான், என்று துக்ளக் ஆசிரியர் சோ கூறியுள்ளார்.

    கமல் நடித்து, இயக்கி, தயாரித்துள்ள 'விஸ்வரூபம்' படத்திற்கு தமிழக அரசு விதிக்கப்பட்ட தடைக்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளரும், நடிகருமான சோ, விஸ்வரூபம் தொடர்பாக 'தமிழக அரசு செய்தது சரியே. படம் தடை செய்யப்பட வேண்டிய படம்தான்' என்று கூறியுள்ளார்.

    நேற்று மாலை ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு சோ அளித்த பேட்டியில், "தமிழக அரசு 'விஸ்வரூபம்' படத்தை தடை செய்தது சரிதான். இப்படிதான் செய்ய முடியும்.

    ஒரு திரைப்படத்துக்காக, ஒரு நடிகரின் வர்த்தகத்துக்காக மாநில அரசு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது.

    பொதுமக்கள் நலன் உள்ள திசையிலேயே முதல்வர் ஜெயலலிதா நின்றார். ஒரு படம் சிலரது நம்பிக்கைகளை தகர்க்கும் என்றால், அந்தப் படம் தடை செய்யப்படத்தான் வேண்டும்," என்றார்.

    English summary
    Thuglak Editor Cho justified the ban imposed by Jaya govt on Viswaroopam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X