மிரட்டும் பொன்னியின் செல்வன் போஸ்டர்.. இரண்டாவது சிங்கிளுக்கு ரெடியா மக்களே!

சென்னை : நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் செப்டம்பர் 30ம் தேதி ரிலீசாக உள்ளது பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம்.

Recommended Video

PS-1 அடுத்த Song Ready | சினிமா செய்திகள் அப்டேட்.. | Live | Filmibeat Tamil

இயக்குநர் மணிரத்னத்தின் கனவு பிராஜெக்டாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வம். மிகவும் பிரம்மாண்டமாக படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், லைகா இணைந்து தயாரித்துள்ளது.

படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏஆர் ரஹ்மான். படத்திற்காக மிகுந்த ஹோம்வொர்க் செய்துள்ளதாக அவர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

மணிரத்னம் கனவு படம்

மணிரத்னம் கனவு படம்

இயக்குநர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன். கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற இந்தக் கதையை திரைப்படமாக்க பல ஜாம்பவான்கள் முன்னதாக முயற்சித்த நிலையில், மணிரத்னத்திற்கு தற்போது இந்தப் படம் சாத்தியமாகியுள்ளது. இந்தப் படத்தை மணிரத்னமே முன்னதாக பலமுறை எடுக்க முயற்சித்தது வேறு கதை.

இரண்டு பாகங்கள்

இரண்டு பாகங்கள்

பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் முதலில் வெளியாகும் பாகம் ஒன்று அடுத்த மாதம் 30ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரம்மாண்டமான படம்

பிரம்மாண்டமான படம்

தன்னுடைய சிறப்பான திரைக்கதைக்காகவே அதிகமான கவனத்தை பெற்றுள்ளார் மணிரத்னம். அவரது கதைகளில் கேரக்டர்கள் அதிகமாக பேசாமல் உடல்மொழியிலேயே தங்களுடைய விருப்பு வெறுப்புகளை தெரிவிக்கும். இவரது படங்களில் அதிகமாக பிரம்மாண்டம் இருக்காது. அந்த வகையில் இந்தப் படம் மணிரத்னத்திற்கு புதிய முயற்சிதான்.

ரசிகர்கள் விருப்பம்

ரசிகர்கள் விருப்பம்

அவரது இயக்கத்தில் பொன்னியின் செல்வன் கேரக்டர்கள் வரலாற்றுப் படங்களுக்கே உரிய அளவில் அதிகமாக பேசுவார்களா, அல்லது டயலாக் குறைவாக இருக்குமா என்றும் தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த விருப்பத்துடன் காத்திருக்கின்றனர். படத்தின் டீசர், பாடல் வெளியீடுகள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன.

நட்சத்திரப் பட்டாளம்

நட்சத்திரப் பட்டாளம்

நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன் என நட்சத்திரப் பட்டாளங்களே நடித்துள்ள இந்தப் படம், பாகுபலி படங்களின் பிரம்மாண்டத்தை முறியடிக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். முன்னதாக தமிழகத்தில் இந்தப் படத்தின் வசூலை விக்ரம் முறியடித்துள்ள நிலையில், பிரம்மாண்டத்தையும் பொன்னியின் செல்வன் முறியடித்தால் தமிழ் படங்களின் பெருமை உலகளவில் மேலும் உயரும்.

பொன்னி நதி பாடல்

பொன்னி நதி பாடல்

ஏஆர் ரஹ்மான் இசையில் இந்தப் படத்தின் பாடல் பொன்னி நதி சமீபத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. கார்த்தி இந்தப் பாடலில் சிறப்பாக காணப்பட்டார். இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீடும் கூடிய விரைவில் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது.

சோழா சோழா பாடல்

சோழா சோழா பாடல்

இதனிடையே படத்தின் சோழா சோழா என்ற இரண்டாவது பாடல் வரும் 19ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் பாடலில் விக்ரம் முதன்மைப் படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

மெனக்கெட்ட ஏஆர் ரஹ்மான்

மெனக்கெட்ட ஏஆர் ரஹ்மான்

இந்தப் பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். பாடலை சத்ய பிரகாஷ், விஎம் மகாலிங்கம், நகுல் அப்யாங்கர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் படத்தின் இசைக்காக தான் மிகுதியாக மெனக்கெட்டதாக முன்னதாக ஏஆர் ரஹ்மான் தெரிவித்திருந்தார். பழங்கால இசைக்கருவிகளை தேடி கண்டுபிடித்து பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X