டிஸ்னியின் ‘ஃப்ரோஸன் 2’ படத்திற்கு குரல் கொடுக்கும் சோப்ரா சகோதரிகள்!
வால்ட் டிஸ்னி தயாரிப்பில் உருவாகியுள்ள அனிமேஷன் திரைப்படம் வரும் நவம்பர் 22ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் இந்தி வெர்ஷனுக்கு பிரியங்கா சோப்ரா மற்றும் பிரணிதி சோப்ரா குரல் கொடுக்க உள்ளனர்.
மும்பை: வால்ட் டிஸ்னி தயாரிப்பில் வரும் நவம்பர் 22ம் தேதி 'ஃப்ரோஸன் 2' படம் வெளியாகிறது.
அனிமேஷன் படமான 'ஃப்ரோஸன் 2' இந்தி வெர்ஷனுக்கு பாலிவுட்டின் சோப்ரா சகோதரிகளான பிரியங்கா சோப்ரா மற்றும் பரிணித்தி சோப்ரா குரல் கொடுக்கவுள்ளனர்.
முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை அடைந்த நிலையில், இரண்டாவது பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
முதல் பாகம்
டிஸ்னியின் ஃப்ரோஸன் படம் கடந்த 2013ம் ஆண்டு வெளியானது. ஜெனிபர் லீ மற்றும் க்ரிஸ் பக் இணைந்து இயக்கிய இந்த ஃபேண்டஸி படம் உலகளவில் மிகப்பெரும் வசூல் சாதனையை படைத்தது. பனி பிரதேசத்தில் வாழும் இளவரசிகளான ஆனா மற்றும் எலிசாவின் ஃபேண்டஸி கதை தான் ஃப்ரோஸன்.

இந்தி டப்பிங்
வரும் நவம்பர் மாதம் 22ம் தேதி வெளியாகவுள்ள 'ஃப்ரோஸன் 2' படத்தின் இந்தி வெர்ஷனுக்காக, பாலிவுட்டின் சோப்ரா சகோதரிகள் குரல் கொடுக்கின்றனர். ஃப்ரோஸன் படத்தின் முக்கிய கதாபாத்திரமான 'ஆனா'வுக்கு பிரியங்கா சோப்ராவும் அனாவின் தங்கை கதாபாத்திரமான 'எலிசா'வுக்கு பரிணித்தி சோப்ராவும் இந்தி மொழியில் டப்பிங் பேசுகின்றனர்.

ஹாலிவுட்டில் யார்?
அனிமேஷன் திரைப்படமான 'ஃப்ரோஸன் 2' படத்திற்கு ஹாலிவுட் நாயகி கிரிஸ்டன் பெல் 'ஆனா' கதாபாத்திரத்திற்காக டப்பிங் பேசியுள்ளார். மற்றொரு ஹாலிவுட் நடிகையான எவன் ரேச்சல் வுட் 'எலிசா' கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசியுள்ளார்.

தமிழில் ரிலீஸ்
டிஸ்னியின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஃப்ரோஸன் 2' திரைப்படம், இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என நான்கு மொழிகளில் வெளியாகிறது. தமிழ் மொழியில் முன்னணி நடிகைகள் யாரும் குரல் கொடுக்கின்றனரா? என்ற விவரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications











