பாஜக.,வுக்காக பிரச்சாரம்...கலா மாஸ்டர் செய்த வேலையை பாத்தீங்களா ?
அரவக்குறிச்சி : 1982 ல் தமிழ் சினிமாவில் நடன கலைஞராக வாழ்க்கையை துவக்கியவர் கலா மாஸ்டர். பின்னர் படிப்படியாக உயர்ந்து நடன இயக்குனரானார். தமிழ் சினிமாவில் இவருடன் பணியாற்றாத நடிகர்களே இல்லை எனலாம்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஒடியா, இந்தி, பெங்காலி, இத்தாலி, ஜப்பான் மொழிகளில் ஏறக்குறைய 4000 க்கும் அதிகமான பாடல்களில் பணியாற்றி உள்ளார். சமீபத்தில் பாஜக.,வில் இணைந்த இவர், தற்போதைய சட்டசபை தேர்தலில் அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளராக இருந்து வருகிறார்.

பாஜக.,விற்கு ஆதரவாக அனைத்து தொகுதிகளுக்கும் சென்று, மக்களிடம் ஓட்டு கேட்டு வருகிறார் கலா. இந்நிலையில் இன்று, அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அண்ணாமலையை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
Fantastic response - Undoubtedly the winner @narendramodi @BJYMinTN @annamalai_k @cibi_m @BJP4India @AmitShah @blsanthosh @JPNadda @khushsundar pic.twitter.com/L4BByr6P6q
— Kala Master (@kala_master) April 4, 2021
திறந்த வேனில் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட கலா, ரஜினி நடித்த 'மாப்பிள்ளை' பட பாடலை ரீமேக் செய்து பாஜக.,விற்காக அமைக்கப்பட்ட பிரச்சார பாடலுக்கு நடனமாடி ஓட்டு சேகரித்தார். முதலில் வேனின் மீது நடனமாடிய கலா, பிறகு கீழே இறங்கியும் நடனமாடினார்.
வாக்காளர்களை குஷிப்படுத்த கலா மாஸ்டர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் பாஜக.,விற்கு ஆதரவாக ஓட்டுக் கேட்க கோவை வந்த நடிகை நமீதாவும், 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடி ஓட்டு சேகரித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











