சூர்யா 42 படத்தில் இணைந்த நாட்டு நாட்டு பாடலின் நடன அமைப்பாளர்!

சென்னை : நடிகர் சூர்யாவின் சூர்யா 42 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்துவரும் சூர்யாவின் ஃபேன் பேஸ் அதிகரித்துள்ள நிலையில், சூர்யா 42 அப்டேட் மற்றும் டைட்டிலை ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.

விரைவில் படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான படத்தின் மோஷன் போஸ்டர் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா


நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் என அடுத்தடுத்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. இதையடுத்து தற்போது இயக்குநர் சிவா டைரக்ஷனில் சூர்யா தற்போது சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். இதன் சூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.

சூர்யா 42 படம்

சூர்யா 42 படம்

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் படத்தின் பூஜையின்போதே வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தில் வரலாற்று காலம் மற்றும் நிகழ்காலம் என இரண்டு காலகட்டங்களில் கதைக்களம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் நிகழ்காலத்திற்கான சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் அப்டேட் தெரிவித்துள்ளார்.

பிரம்மாண்ட சூட்டிங்

பிரம்மாண்ட சூட்டிங்

படத்தில் நடிகர் சூர்யாவிற்கு பாலிவுட் நாயகி திஷா பட்டானி ஜோடியாகியுள்ளார். கோவாவில் படத்தின் சூட்டிங் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யா மற்றும் திஷா பட்டானி இடம்பெற்ற டூயட் பாடலின் சூட்டிங்கும் நடத்தப்பட்டது.

சூர்யா 42 படத்தின் டைட்டில்

சூர்யா 42 படத்தின் டைட்டில்

படம் இந்திய அளவில் 10 மொழிகளில் திரையிடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் இன்னும் வைக்கப்படாத நிலையில், எல்லா மொழிகளுக்கும் பொருத்தமாக வீர் என்ற தலைப்பை வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் படத்தின் தலைப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நாட்டு நாட்டு பாடலின் நடன அமைப்பாளர்

நாட்டு நாட்டு பாடலின் நடன அமைப்பாளர்

படம் மிகவும் பிரம்மாண்டமான அளவில் உருவாகி வருகிறது. மேலும் இதுவரை இல்லாத அளவில் ரிலீசுக்கு முந்தைய சூர்யாவின் இந்தப் படத்தின் வியாபாரமும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இதனால் தயாரிப்பு தரப்பு மிகவும் உற்சாகத்தில் உள்ளது. இதனிடையே சமீபத்தில் ஆஸ்காருக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலின் நடன அமைப்பாளர் பிரேம் ரக்ஷித் சூர்யா 42 படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அப்டேட் தெரிவித்துள்ளது.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இணைப்பு

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இணைப்பு

ஆர்ஆர்ஆர் படத்தின் அனைத்து பாடல்களும் கவனம் பெற்றாலும் நாட்டு நாட்டு பாடல் மற்றும் அதன் நடன அமைப்பு சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை வசியம் செய்துள்ளது. பல்வேறு விருதுகளையும் குவித்து வருகிறது. இந்நிலையில் இதன் நடன அமைப்பாளர் சூர்யா 42 படத்தில் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X