வனிதாவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: ராபர்ட்
சென்னை: தனக்கும் வனிதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நடன இயக்குனர் ராபர்ட் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர் விஜயகுமாருக்கும், மகள் வனிதாவுக்கும் சமீபத்தில் பங்களாவை வாடகைக்கு விட்ட பிரச்சனை பூதாகரமானது. ஆலப்பாக்கத்தில் உள்ள பங்களாவை ஷூட்டிங்குக்காக வாடகைக்கு எடுத்த வனிதா அங்கேயே தங்கிவிட்டதாக விஜயகுமார் போலீசில் புகாரளிக்க, அந்த வீட்டில் தனக்கும் உரிமை இருக்கிறது என வனிதா ஆவேசமடைந்தார். அந்த பிரச்சனைக்குப் பிறகு தலைமறைவாகிவிட்டதாக சொல்லப்பட்டது.

இந்தநிலையில், இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து செய்துகொண்ட வனிதா, தற்போது நடன இயக்குனரும், நடிகருமான ராபர்ட்டுடன் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
இந்த தகவலை மறுத்துள்ள நடன இயக்குனர் ராபர்ட், எனக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர். நான் என்னுடைய மனைவி கிருஷ்ணபிரியா மற்றும் மகள் அர்ஷிதாவுடன் வசித்து வருகிறேன். இந்த செய்தியால் நானும் என் குடும்பத்தாரும் மிகுந்த மனவேதனை அடைந்தோம் எனத் தெரிவித்துள்ளார்.
குடும்ப வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டே வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார் வனிதா. இரண்டுமுறை விவாகரத்து ஆனபிறகு அவருடைய தாயார் மஞ்சுளா தான் வனிதாவுக்கு ஆதரவாக இருந்துள்ளார். மஞ்சுளாவின் மறைவுக்கு பிறகு வனிதா மன உளைச்சலுடன் தனிமைத் தீயில் வாடுவதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











