தளபதிக்கே ஆக்சன் சொல்லிட்டேன்... மகிழ்ச்சியில் நடன இயக்குனர்
சென்னை : தளபதி 64 படத்தில் நடன இயக்குனராக சதீஷ் இணைந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் 'சொல்லிட்டேன் என் உயிர் தளபதிக்கு ஆக்சன் சொல்லிடேன் என்றும், மூவுட் அன்ட் பீல் எமோஷனல் என்று மனமகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் தான் தளபதி 64. இப்படத்தை சேவியர் ப்ரிட்டோவின் எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது . கடைசியாக விஜயின் தெறி படம் 2016 தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது .

தற்போது தளபதி 64 படத்தில் தளபதி விஜயுடன் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, ஆன்டனி வர்கீஸ், ஆன்ட்ரியா, சஞ்சீவ், ஶ்ரீநாத், ரம்யா சுப்ரமணியன், கௌரி கிஷான், சேத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தில் பல பிரபலங்கள் இணைந்துள்ளதால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

நடன இயக்குனர் சதீஷ் பல படங்களில் பல ஹீரோக்களுக்கு நடன இயக்கம் செய்து இருக்கிறார். உன்னாலே உன்னாலே, வாரணம் ஆயிரம், அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தும் இருக்கிறார்.
தற்போது பல நடசத்திரங்களுக்கு இடையே மற்றொரு நட்சத்திரமாக நடன இயக்குனர் இணைந்து இருப்பது ரசிகர்களை வெகுவாக உற்சாகப்படுத்தி உள்ளது. பெரும் நட்சத்திரக்கூட்டம் இணைந்துள்ள இப்படம் எப்போது வரும் என்று ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்போடு இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











