ரிகர்சலே இல்லாம சூப்பராக டான்ஸ் ஆடுறவர் அந்த ஹீரோ மட்டும் தான்... பிரபல டான்ஸ் மாஸ்டர் பாராட்டு
ஐதராபாத் : சமீபத்தில் வெளியாகியுள்ளது ஆர்ஆர்ஆர் படம். இந்தப் படத்தை இயக்கியுள்ளார் பிரம்மாண்ட படங்களின் இயக்குநர் ராஜமௌலி.படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்துள்ளனர். இருவரும் சமமான கேரக்டர்களில் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஆர்ஆர்ஆர் படம்
நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இணைந்து மிரட்டியுள்ள படம் ஆர்ஆர்ஆர். பிரம்மாண்டங்களின் இயக்குநர் ராஜமௌலி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள படங்களின் வரிசையில் இந்தப் படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ராஜமௌலி மெனக்கெடல்
சுதந்திர போராட்டக் காலத்தை இந்த முறை இந்தப் படத்தில் கையில் எடுத்துள்ளார். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அந்தக் கால கட்டத்தை ரசிகர்களுக்கு காட்ட வேண்டும் என்ற மெனக்கெடல் ரசிகர்களுக்கு தெரியவருகிறது. அவர்களின் மெனக்கெடல்களுக்கு ரசிகர்களும் வெற்றி என்ற பரிசை கொடுத்துள்ளனர்.

வசூல் சாதனையில் ஆர்ஆர்ஆர்
படம் தற்போது கோடிக்கணக்கில் தொடர் வசூல் சாதனை செய்து வருகிறது. இந்தப் படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவருக்கும் சமமான ரோல்களை கொடுத்துள்ளார் ராஜமௌலி. படத்தில் கூடுதல் அட்ராக்ஷனாக ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி என படத்தை மெருகேற்றியுள்ளார்.

நாட்டு நாட்டு பாடல்
படத்தில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இணைந்து ஆடியுள்ள நாட்டு நாட்டு பாடலை சொல்லலாம். இருவரும் காட்சிகளை போலவே இந்தப் பாடலில் சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்திருந்தனர். அந்த அளவிற்கு இந்தப் பாடலின் நடனம் சிறப்பாக அமைந்திருந்தது.

ஜூனியர் என்டிஆர் குறித்து பாராட்டு
இந்நிலையில் பிரபல நடன இயக்குநர் சேகர், இந்திய அளவில் ரிகர்சலே இல்லாமல் ஆடக்கூடிய ஒரே ஹீரோ ஜூனியர் என்டிஆர்தான் என்று புகழ்ந்துள்ளார். நடன அசைவுகளை ஒருமுறை பார்த்துவிட்டே ஆடக்கூடியவர் ஜூனியர் என்டிஆர் என்று அவர் கூறியுள்ளார்.

ஒரே டேக்கில் ஓகே
மேலும் நடன அசைவுகளை ஒரே டேக்கில் ஜூனியர் என்டிஆர் ஓகே செய்துவிடுவார் என்றும் சேகர் குறிப்பிட்டுள்ளார். ஆர்ஆர்ஆர் வெற்றியை தொடர்ந்து தற்போது ஜூனியர் என்டிஆர் தனது என்டிஆர்30 படத்தின் சூட்டிங்கிற்காக கொரட்டாலா சிவா இயக்கத்தில் இணைந்துள்ளார்.

என்டிஆர்31 படம்
இதையடுத்து கேஜிஎப் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் தனது அடுத்தப்படமான என்டிஆர்31 படத்திற்காக கூட்டணி அமைக்கவுள்ளார். தற்போது பிரபாசின் சலார் படத்தை இயக்கிவரும் பிரஷாந்த் நீல் அடுத்ததாக ஜூனியர் என்டிஆரை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











