twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்படி போடு.. இந்தியாவில் தீபாவளி கொண்டாடும் அவெஞ்சர் நடிகர்!

    தோர், அவெஞ்சர் உள்ளிட்ட படங்களில் தோர் கதாபாத்திரத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த் இந்தியாவில் தீபாவளி கொண்டாடி வருகிறார்.

    |

    மும்பை: ஹாலிவுட் நடிகர் க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த் இந்தியாவில் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார்.

    தோர், அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட படங்களில் தோர் கதாபாத்திரத்தில் நடித்தவர் க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த்.

    இந்தியாவில் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கும் க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த், இந்தியர்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில்

    இந்தியாவில்

    இந்தியாவில் க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த் படப்பிடிப்பில் இருக்கிறார் என்ற செய்தி அறிந்ததும், என்ன படத்தின் ஷூட்டிங்கில் அவர் நடிக்கிறார் என்ற ஆவல், ரசிகர்களிடம் எகிறியுள்ளது. தாக்கா எனும் நெட்பிளிக்ஸ் தொடரில் பாலிவுட் நடிகர் ரந்திப் ஹூடாவுடன் இணைந்து க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த் நடித்து வருகிறார்.

    இந்த வருடம்

    இந்த வருடம்

    தோர் நடிகர் க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிப்பில் இந்த ஆண்டு அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் மற்றும் மென் இன் பிளாக் என இரு பிளாக்பஸ்டர்கள் வெளியாகின. தற்போது, இந்தியாவில் தாக்கா எனும் வெப் தொடரை தயாரித்து நடித்து வருகிறார். தாக்காவில் டைலர் ரேக் எனும் கதாபாத்திரத்தில் ஹெம்ஸ்வொர்த் நடித்து வருகிறார்.

    தொப்பை தோர்

    தொப்பை தோர்

    இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் தொப்பை போட்டா தோராக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த். சுற்றுலா விரும்பியான ஹெம்ஸ்வொர்த், உலகின் பல நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஹேப்பி தீபாவளி

    இந்தியாவில் இன்று தீபாவளி கொண்டாடி வரும் ஹாலிவுட் நடிகர் க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த், ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில், நீல நிற குர்தா - பைஜாமா அணிந்து, நெற்றியில் குங்கும திலகமும் இட்டு பார்க்க அச்சு அசல் ஒரு இந்தியரை போலவே மாறி தீபாவளி கொண்டாடி வருகிறார்.

    Read more about: thor
    English summary
    Thor actor Chris Hemsworth is in India and he posted a sweet Diwali wish for his fans on Facebook on the occasion of the festival which is being celebrated across the country today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X