கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்ட வில் ஸ்மித். கலாய்த்து தள்ளிய கிறிஸ் ராக்: இதுக்கு ஒரு முடிவே இல்லையா?

அமெரிக்கா: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த மார்ச் மாதம், 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விருது வழங்கும் விழாவில் காமெடி நடிகர் கிறிஸ் ராக்கை வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்தது பெரும் சர்ச்சையானது.

இந்த சம்பவத்திற்காக மன்னிப்புக் கேட்ட வில் ஸ்மித்துக்கு, காமெடி நடிகர் கிறிஸ் ராக் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரியாக்ட் செய்துள்ளார்.

வில் ஸ்மித் – கிறிஸ் ராக் மோதல்

வில் ஸ்மித் – கிறிஸ் ராக் மோதல்

94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவின் ஒருபகுதியை காமெடி நடிகர் கிறிஸ் ராக் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டின் தலைமுடி குறித்து, கிறிஸ் ராக் கிண்டல் செய்தார். அதனால் அதிருப்தியடைந்த வில் ஸ்மித், நேராக மேடைக்குச் சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் பளார் என ஓங்கி அறைவிட்டார். ஆஸ்கர் விழாவில் கிறிஸ் ராக்கை வில் ஸ்மித் தாக்கிய சம்பவம், பெரும் சர்ச்சையானது.

பேச முயற்சி

பேச முயற்சி

இதுதொடர்பாக வில் ஸ்மித், எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். கிறிஸ் ராக்கிடம் ஏன் மன்னிப்பு கேட்கவில்லை என ரசிகர்களும் கேள்விகளை எழுப்பினர். இதனையடுத்து தனது யூ-டியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் வில் ஸ்மித். அதில், தான் கிறிஸ் ராக்கை தொடர்பு கொண்டு பேச முயன்றதாகவும், ஆனால் அவர் பேச ரெடியாக இல்லை வில் ஸ்மித் கூறியிருந்தார்.

வீடியோவில் மன்னிப்பு

வீடியோவில் மன்னிப்பு

இந்த வீடியோவில் தொடர்ந்து பேசிய வில் ஸ்மித், "எனது செயல் எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல, இதற்காக கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கண்ணீர் மல்க பேசியிருந்தார். மேலும், கிறிஸ் ராக்குடன் எப்போது வேண்டுமானாலும் பேச தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார். அதோடு கிறிஸ் ராக்கின் அம்மாவிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டிருந்தார் வில் ஸ்மித்.

கிறிஸ் ராக் ரியாக்‌ஷன்

கிறிஸ் ராக் ரியாக்‌ஷன்

வீடியோவின் இறுதியில் வில் ஸ்மித் 'ஐ லய் யூ பேபி' என கிறிஸ் ராக்கை பார்த்து கூறியிருந்தார், பதிலுக்கு கிறிஸ் ராக்கும் 'லய் யூ டூ பேபி' என பதில் சொல்லி, பஞ்சாயத்தை முடித்து வைக்க வேண்டும் எனவும், ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவந்தனர். ஆனால், வில் ஸ்மித்தின் மன்னிப்புக்கு கிறிஸ் ரியாக்ட் செய்துள்ளதைப் பார்த்தால், பஞ்சாயத்து இப்போதைக்கு முடியாது எனத் தெரிகிறது.

Recommended Video

Will Smith Chris Rockஐ Oscar Stage-ல் அறைந்தது ஏன்? | Filmibeat Tamil
கலாய்க்கும் கிறிஸ் ராக்

கலாய்க்கும் கிறிஸ் ராக்

கிறிஸ் ராக்கை ஒரோயொரு முறை அறைந்த வில் ஸ்மித்தோ ஓராயிரம் முறை மன்னிப்புக் கேட்டுவிட்டார். ஆனால், அதையெல்லாம் சுத்தமாக கணக்கில் எடுத்துக்கொள்ளாத கிறிஸ் ராக், வில் ஸ்மித்தை கலாய்த்து வருகிறார். "எல்லோருமே தங்களது தவறுகளை நியாயம் செய்து வருவதாகவும், இது வேடிக்கையாக உள்ளதாகவும்" கூறியுள்ளார். மேலும், ஆஸ்கர் விழா முடிந்ததில் இருந்து தற்போது வரை, வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்ததை காமெடியாகவே கிறிஸ் ராக் கிண்டல் செய்துவருகிறார். வில் ஸ்மித் மன்னிப்புக் கேட்கும் ஒவ்வொரு முறையும் கிறிஸ் ராக் இப்படி கலாய்த்து வருவது, ரசிகர்களையே அதிர வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X