சண்டைக்கு லீவ் போல.. கொடுத்து வச்ச போட்டியாளர்கள்.. ஒரே பரிசு மழை தான்.. களைகட்டிய கிறிஸ்துமஸ்!
சென்னை: கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாகவே வரவுள்ளது.
இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரமோவிலேயே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும், கேக் கட்டிங்களும், பரிசுகளும் என ஒரே ஹேப்பி மூட் தான்.
இந்த சீசன் போட்டியாளர்கள் நிச்சயமாவே ரொம்ப கொடுத்து வச்சவங்க, ஒரே செலிபிரேஷனும் பரிசுமா அள்ளுறாங்க என முன்னாள் போட்டியாளர்களே பொறாமை கொள்வர்.

ஏகப்பட்ட பண்டிகைகள்
இந்த முறை கொரோனா காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் தள்ளி வைக்கப் பட்ட நிலையில், ஏகப்பட்ட பண்டிகைகளை பிக் பாஸ் போட்டியாளர்கள் கொண்டாடி வருகின்றனர். கேக்குகளும், பரிசுகளும், விளம்பர டாஸ்க்குகளும் என வீட்டுக்கு போகும் போது தனி லாரியை வைத்தே அவர்களது பரிசுகள் கொண்டு வந்து கொடுக்கப்படும் என தெரிகிறது.

பிக்பாஸ் கிறிஸ்துமஸ்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிக் பாஸ் வீடு கோலாகலமாக களைகட்டியுள்ளது. வண்ண விளக்குகள், கிறிஸ்துமஸ் மரங்கள் என அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை பார்த்த போட்டியாளர்கள் துள்ளி குதித்து ரசிப்பதும், தங்களுக்கு வழங்கப்பட்ட கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டி மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வதுமாக இன்றைய முதல் புரமோ அமைந்துள்ளது.

வெளி ஆட்கள்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியே இருந்து சில பாடகர்கள் கண்ணாடி பெட்டிக்குள் நின்று கொண்டு கிறிஸ்துமஸ் பாடல்களை பிக் பாஸ் போட்டியாளர்களுக்காக பாடும் காட்சிகளும் இன்றைய முதல் புரமோவில் இடம் பெற்றுள்ளது. நிச்சயம் இன்றைய நிகழ்ச்சி முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாகவே இருக்கும் என தெரிகிறது.

பரிசு மழை
பிக் பாஸ் சீசனில் இதுவரை எந்த சீசன் போட்டியாளர்களுக்கும் இப்படியொரு பரிசு மழை கிடைத்திருக்காது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏகப்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் டாஸ்க்குகள் நேற்றே லெவிஸ்டா காபி மூலம் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிலையில், இன்றும் என்ன என்ன டாஸ்க்குகள் இருக்கும் என ரசிகர்கள் நிகழ்ச்சியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சண்டைக்கு லீவ்
இதுபோன்ற கொண்டாட்ட நாட்களில் பிக் பாஸ் போட்டியாளர்களிடையே சண்டைக்கு லீவ் விடப்பட்டு விடும். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து செம ஹேப்பியாக கொண்டாடுவார்கள். ஆனால், கடைசியில் ஏதாவது ஒரு பிரச்சனையை அடுத்த நாள் கிளப்பி மறுபடியும் ஃபார்முக்கு வந்துவிடுவார்கள்.


Click it and Unblock the Notifications











