திரை பிரபலங்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. இணையத்தில் தீயாய் பரவும் போட்டோஸ்!

சென்னை: இயேசு கிறிஸ்து அவதரித்த நாள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நாளில் திரைப்பிரபலங்களும் தங்களின் வீட்டில் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்து, அனைவருக்கும் கேக் கொடுத்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி உள்ளனர். அந்த போட்டோக்களை இணையத்தில் ஷேர் செய்துள்ளனர்.

Christmas 2025 Nayanthara Meena 2025
Photo Credit:

நடிகை மீனா தனது மகள் நைனிகாவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட போட்டோவை ஷேர் செய்துள்ளார். தெறி படத்தில் குட்டி பெண்ணாக நாம் பார்த்த நைனிகா வளர்ந்து பெரிய பெண்ணாக புடவையில் இருக்கிறார். அம்மா போலவே நைனிகாவின் கண்களும் கவிதை பேசுகிறது. இந்த போட்டோ இணையத்தில் பலரால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

நடிகர் சிவகாத்திகேயன்: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் பராசக்தி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. பரபரப்பான ஒரு படமாக பராசக்தி இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி உள்ளார். அந்த போட்டோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Christmas 2025 Nayanthara Meena 2025
Photo Credit:

நடிகை சீதா: நடிகை சீதா தனது மகள் அபிநயாவுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி உள்ளனர். அந்த போட்டோவை அபிநயா பார்த்திபன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். சீதா, பார்த்திபன் இருவரும் பிரிந்து வாழ்த்து வந்தாலும், குழந்தைகள் எப்போதும் தாய், தந்தையோடு சேர்த்துத்தான் பயணிக்கின்றனர். இந்த போட்டோவிற்கு லைக்குகள் குவித்து வருகிறது.

நடிகை இவானா: பாலாவின் நாச்சியார் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவானா. அந்த படத்தை தொடர்ந்து, லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக நடித்து பெரிய அளவில் பிரபலம் ஆனார். இவருக்கு என்று பெரிய அளவில் ரசிகர் கூட்டமும் இருக்கிறது. இன்ஸ்டாவில் மட்டும் அவரை 2.3 மில்லியன் ரசிகர்களை வைத்து இருக்கும் இவானா கிறிஸ்துமஸ் கொண்டாட்ட போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: இசையமைப்பாளர் சாய் அபயங்கர், இயக்குநர் அட்லியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதே போல நடிகை நயன்தாரா, தனது கணவர், இரண்டு மகன்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி உள்ளபோட்டோவை இணையத்தில் ஷேர் செய்துள்ளார். அதற்கு பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: nayanthara meena
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X