யார் ஜெயிப்பா? கிறிஸ்துமஸ் ரேஸில் சிவகார்த்திகேயன், ஜீவா, ஜி.வி. பிரகாஷ்!
Recommended Video
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர் 20ம் தேதி இளம் ஹீரோக்களின் 3 பெரிய படங்கள் ரிலீசாகின்றன.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ, ஜீவாவின் சீறு மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமாரின் ஆயிரம் ஜென்மங்கள் அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மோதுகின்றன.
தீபாவளி கிளாஷுக்கு பிறகு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இளம் ஹீரோக்களின் மிகப்பெரிய கிளாஷ் கோலிவுட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோ
கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்காக வீடியோ கேம் உள்ளிட்ட வேற லெவல் புரமோஷன்களை செய்து வருகின்றது. சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன் காம்போவை பார்க்க சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சீறு
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெளியாகவுள்ள ஜீவாவின் சீறு படமும் வரும் டிசம்பர் 20ம் தேதியே வெளியாகிறது. விஜய்சேதுபதியை வைத்து றெக்க படத்தை இயக்கிய ரத்தின சிவா இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார்.

என்ன ஆச்சு
ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவான ஜிப்ஸி படம், சென்சார் பிரச்சனைகள் முடிந்து ஏ சான்றிதழ் பெற்றதாக கடந்த மாதம் செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் குறித்த புதிய தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. வேறு எந்த பிரச்சனையில் ஜிப்ஸி சிக்கித் தவிக்கிறதோ தெரியவில்லை.

ஆயிரம் ஜென்மங்கள்
துள்ளாத மனமும் துள்ளும், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சரவணன் இருக்க பயமேன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய, இயக்குநர் எழில் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஆயிரம் ஜென்மங்கள் ஹாரர் காமெடி படமும் டிசம்பர் 20 போட்டிக்கு ரெடியாகி விட்டது. இந்த படத்தில் ஈஷா ரெப்பா, நிகிஷா பட்டேல், வெண்பா மற்றும் பிக்பாஸ் சாக்ஷி உள்ளிட்ட நடிகைகள் ஜி.வி. பிரகாஷுடன் நடித்துள்ளனர்.

யாரு ஜெயிப்பா?
இரும்புத்திரை பெற்ற பிளாக்பஸ்டர் வெற்றியை வைத்து பார்த்தால், ஹீரோ தான் இந்த கிறிஸ்துமஸ் ரேசில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. றெக்க படத்தின் தோல்வியை தொடர்ந்து சீறு படத்தை இயக்கியுள்ள ரத்தின சிவா, நிச்சயம் வெற்றியை பெற உழைத்திருப்பார் என்று தெரிகிறது. காமெடி படங்களில் கலக்கி வரும் எழில் தனது ரசிகர்களை நிச்சயம் சிரிக்க வைப்பார். டிசம்பர் 20ம் தேதி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் எந்த படம் வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











