எப்போதும் படங்களுக்கு இருக்கும் கடைசி துருப்புச்சீட்டு.. கிருஸ்துமஸ்!
சென்னை: தமிழ் சினிமாவை பொருத்த வரையில் ஒரு படம் வெளியாகும் தேதி மிக அவசியமாகும். ஏனெனனில் ஒரு படம் தவறான தேதியில் வெளியாகி நல்ல படமாகவே இருந்தாலும் வசூல் இல்லையெனில் சினிமா வட்டாரங்களில் தோல்வி முத்திரை குத்தப்படும். அதனால் தயாரிப்பாளர்கள் படத்தின் வெளியீட்டு தேதியில் மிக கவனமாக இருப்பார்கள் .
தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்கள் எப்போதும் பெரிய விடுமுறை நாட்களையே குறிவைக்கும் வழக்கம் உண்டு. முக்கியமாக பொங்கல், தமிழ் புத்தாண்டு, மே மாதம், ஆகஸ்ட் 15, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ்.

இப்படிப்பட்ட திருவிழா கலந்த விடுமுறை நாட்களை தான் அதிகபடியான பெரிய பட்ஜெட் படங்கள் குறிவைக்கும் அப்போது தான் மக்கள் அதிக அளவில் திரையரங்குகளில் வந்து படத்தை பார்ப்பார்கள் படத்தின் விமர்சனம் எப்படி இருந்தாலும் படம் மினிமம் கேரன்டியில் வசூல் செய்து விடும்.
படங்கள் பெரும்பாலும் ஆங்கில புத்தாண்டான ஜனவரி 1 வெளியாவது இல்லை. அப்படி வெளிவருவது மிகவும் அதிசயம். வந்தாலும் சின்னசின்ன படங்களே வரும். ஏனெனில் பொங்கல் நெருங்கும் தேதி என்பதால் பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் பொங்கலுக்கு வரும் புத்தாண்டிற்கு படங்கள் வெளியானால் படத்தின் வசூல் பாதிக்கும் என்பதால் எப்போதும் பெரிய ஹீரோ மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் புத்தாண்டில் வெளியாகாது .
ஆனால் படங்கள் புத்தாண்டிற்கு முன் இருக்கும் கிறிஸ்துமஸ் வாரங்களில் வெளியாகும் ஏனெனில் கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு வரையில் பள்ளிகள் விடுமுறையாக இருக்கும் திரையரங்கிற்கும் கூட்டம் அதிகமாக வரும் .அதே நேரத்தில் கிறிஸ்துமஸ் வாரம் ஒரு வாரம் முழுவதும் இருப்பதால் பொங்கலுக்கு முன்பே படங்கள் வசூல் வேட்டையை நடத்தி வடும் அதே நேரத்தில் பொங்கலுக்கு வரக்கூடிய படங்கள் போட்டியின்றி வரும் .
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களை பொருத்தவரையில் படம் வசூல் ரீதியில் வெற்றி பெறுவது மிக பெரிய விசயமாகும் ஏனெனில் தயாரிப்பாளர்கள் வாழ்ந்தால் தான் சினிமா தொடர்ந்து செயல் பட முடியும். தற்போது கிறிஸ்துமஸ் வாரத்திற்கு வெளிவந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படங்கள் ஹீரோ மற்றும் தம்பி ஆகும்.
இப்படங்களின் வெளியீட்டுக்கு ஒரு வாரம் முன்பே வெளியாகிய காளிதாஸ் படமும் கிறிஸ்துமஸ்க்கு வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கபடுகிறது ஏனெனில் யாரும் எதிர்பாராத வெற்றியை காளிதாஸ் படம் எட்டியுள்ளது .கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்த வருடம் ஏதும் படம் இல்லை அதனால் வெளியாகிய படங்களுக்கு இது நல்ல வசூலை ஈட்டி தரும் .


Click it and Unblock the Notifications











