twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ChristopherNolan: இளம் இயக்குநர்களின் இன்ஸ்ப்ரேஷன்.. படைப்புகளால் பேசும் ஜீனியஸுக்கு ஹேப்பி பர்த்டே!

    பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் தனது 49வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

    |

    சென்னை: இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்.

    கிறிஸ்டோபர் நோலன் எனும் இந்த பெயர் இன்று டிவிட்டர் டிரெண்டிங்கில் நம்பர் ஒன். யார் இந்த கிறிஸ்டோபர் நோலன்? டிவிட்டரில் டிரெண்டிங்காகும் அளவுக்கு அவர் என்ன பெரிய நேசமணியா? என பலர் நினைக்கலாம்.

    ஆம் அவர் நம் சினிமா நேசமணிகளின் பிதாமகன். ஹாலிவுட் இயக்குனர் என்பதால் மட்டுமே இன்று அவர் கொண்டாடப்படவில்லை. அவரது படைப்புகள் தான் ரசிகர்கள் அவரை கொண்டாடும் அளவுக்கு உயர்த்தி இருக்கிறது.

    நோலன் தாக்கம்:

    நோலன் தாக்கம்:

    அப்படி என்ன பெரிய படைப்புகளை அவர் படைத்துவிட்டார்? என்று கேட்பவர்களுக்கு இதோ அதற்கான பதில். கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய படங்கள் தான் தமிழ் உள்பட பல மொழி இயக்குனர்களுக்கு பெரிய இன்ஸ்பிரேஷன். அவரது படங்களைத் தழுவி எடுக்கப்பட்ட தமிழ்ப் படங்களைக் கூறினால், நோலன் எப்படிப்பட்டவர் என்பது உங்களுக்கே புரிந்து விடும்.

    முதல்படம் :

    முதல்படம் :

    நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத பல விஷயங்களை தனது படைப்புகளால் நிகழ்த்திக் காட்டியவர் நோலன். நோலனின் முதல் படம் 'பாலோயிங்'. வாழ்வில் விரக்தியடைந்த ஒரு சினிமா உதவி இயக்குனர் கதை தேடுதலுக்காக பல கேரக்டர்களை தெரிந்து கொள்ள முயற்சிப்பான். அவனது தேடும் விநோதமான ஒரு கேரக்டரை பின்தொடர வைக்கும். அதுவே அவனது வாழ்வை மாற்றும்.

    வாமனன் படம்:

    வாமனன் படம்:

    ஹாலிவுட்டில் அதுவரை வெளிவந்த அனைத்து விதமான சினிமா பார்வையையும் உடைத்தெறிந்தது பாலோயிங். மிக சொற்பமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் தான் பல படங்களுக்கு இன்ஸ்பிரேஷன். ஜெய், பிரியா ஆனந்த், சந்தானம்,ரஹ்மான் நடிப்பில் வெளியான வாமனன் படமும் பாலோயிங் படத்தின் இன்ஸ்பிரேஷன் தான்.

    மூன்று பாகம் வந்த பேட் மேன்:

    மூன்று பாகம் வந்த பேட் மேன்:

    உலக ரசிகர்களை தனது பேட் மேன் படத்தால் திரும்பி பார்க்க வைத்தார் நோலன். மூன்று பாகங்கள் வெளிவந்த அந்த படத்துக்கு இன்றும் ரசிகர்கள் ஏராளம். அந்த படத்தில் வரும் ஜோக்கர் பாத்திரம் நோலனின் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்.

    காவியத்தலைவன்:

    காவியத்தலைவன்:

    ஈகோ கிளாஷ் எனும் புதிய விஷயத்தை புகுத்தி நோலன் உருவாக்கிய படம் தான் பிரஸ்டீஜ். அந்த படத்தை அடிப்படையாக வைத்து தான் 'காவியத்தலைவன்' படத்தின் மையக்கரு உருவாக்கியிருப்பார் வசந்தபாலன். பிரிஸ்டீஜ் திரைப்படத்தை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு, பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்கள் வந்துள்ளன. இன்னும் வந்துகொண்டு இருக்கின்றன.

    கஜினி:

    கஜினி:

    உலகின் முதல் ரிவர்ஸ் ஸ்கிரீன்ப்ளே படம் மொமேண்டோ. படத்தின் ஆரம்பமே க்ளைமாக்ஸ் தான். அதில் இருந்து முந்தைய காட்சிகளாக நகர்ந்து முதல் காட்சியில் படம் முடியும். அந்த படத்தில் தான் ஷார்ட் டைம் மெமரிலாஸ் எனும் நோயை பற்றி பேசியிருப்பார் நோலன். அது தான் தமிழில் கஜினியாக மாறி, வெற்றி நடைபோட்டது.

    இன்டர்ஸ்டெல்லர் படம்:

    இன்டர்ஸ்டெல்லர் படம்:

    நோலன் ஒரு அசாதாரண இயக்குனர் என்பதை நிரூபித்தப்படம் இன்டர்ஸ்டெல்லர். பூமியில் ஒருவர் வேறு கிரகத்துக்கு செல்வதானால் அதற்கு ஆகும் நேரம், காலம் உள்பட பல விஷயங்களை பற்றி பேசியிருப்பார் அவர். பொதுவாக நமக்கு முப்பரிமாணம் (3டி) வரை தான் தெரியும். நான்கு பரிமாணம் என்பது கற்பனைகோடு தான் என்பவர். ஆனால் இன்டர்ஸ்டெல்லர் படத்தில் 7வது பரிமாணத்தை பற்றியும், பிளாக் ஹோலுக்கு பின்னால் இருக்கும் விஷயங்கள் பற்றியும் மிகத் தீவிரமாக பேசியிருப்பார் நோலன்.

    கனவுப்படம்:

    கனவுப்படம்:

    லியோனார்டோ டிகாப்ரியோவை வைத்து நோலன் எடுத்த இன்செப்ஷன் படத்தில் பெரும்பாலும் கிராபிக்ஸ் காட்சிகளை பயன்படுத்தியிருக்க மாட்டார் நோலன். அவருக்கு கிராபிக்ஸ் பயன்படுத்துவதில் அதிக உடன்பாடில்லை. எல்லாக் காட்சிகளும் இயற்கையாகவே அமைய வேண்டும் என நினைப்பார். இந்த படத்தில் கனவு, கனவுக்குள் கனவு, அதற்குள் ஒரு கனவு என ஒரு மாய உலகை நமக்கு காட்டியிருப்பார். ஒரே படத்தில் மூன்று விதமான திரைக்கதையை அமைத்தும் அசத்தியிருப்பார்.

    புதிய படம்:

    புதிய படம்:

    இவை மட்டுமன்றி, நோலனின் படைப்புகள் அனைத்துமே இளம் இயக்குனர்களுக்கு ஒரு ரெபரன்ஸ் தான். திரைப்படக் கல்லூரிகளில் நோலனின் படைப்புகள் பல மாணவர்களுக்கு திரையிடப்படுவது வழக்கம். நோலனின் அடுத்தப்படம் டெனன்ட். போர்க்களத்தை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்து வருகிறார் அவர். அடுத்த ஆண்டு மே மாதத்தில் இந்த படம் வெளியாகி ரசிகர்களுக்கு ட்ரீட் தர தயாராகி வருகிறது.

    ஹேப்பி பர்த்டே நோலன்:

    ஹேப்பி பர்த்டே நோலன்:

    இவ்வளவு பெரிய சாதனைகளை செய்துள்ள நோலனின் வயது வெறும் 49 தான். இந்தியாவில் தனக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதோ, தன்னை பற்றி இப்படி ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது என்றோ, அதனை இத்தனை ஆயிரம் பேர் படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதோ நோலனுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது தான் அவரது வெற்றி. நோலனுக்கு நாமும் பிறந்தநாள் வாழ்த்து கூறுவோம். ஹேப்பி பர்த்டே கிறிஸ்டோபர் நோலன்.

    English summary
    The very inspirational director of Hollywood Christopher Nolan is celebrating his 49th birthday today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X