நோலனின் 'டெனட்' படத்தில் 'வலிமை' ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா.. கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

By

சென்னை: ஹாலிவுட் படமான நோலனின் 'டெனட்' படத்தில் தமிழக ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா பணியாற்றியுள்ளார்.

Recommended Video

TENET MOVIE | POSTER PAKIRI REVIEW | FILMIBEAT TAMIL

'இன்டர்ஸ்டெல்லர்', 'இன்செப்ஷன்', 'டார்க் நைட்', 'டன்கிர்க்' உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர், ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்.

இவர் இப்போது இயக்கியுள்ள படம், 'டெனட்'. ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன், எலிசபெத் டிபிக்கி, மைக்கேல் கெய்ன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

அதிக எதிர்பார்ப்பு

அதிக எதிர்பார்ப்பு

இந்தி நடிகை டிம்பிள் கபாடியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வந்த நாளில் இருந்து, சினிமா ஆர்வலர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஸ்பை படமான இதை, பிரம்மாண்ட பொருட்செலவில் கிறிஸ்டஃபர் நோலன் எடுத்திருக்கிறார்.

வரவேற்பை பெற்றது

வரவேற்பை பெற்றது

இதன் ஷூட்டிங், டென்மார்க், எசுத்தோனியா, இந்தியா, இத்தாலி, நார்வே உட்பட பல பகுதிகளில் நடந்துள்ளது. கொரோனா பரவல் அதிகமான காலகட்டத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ரிலீஸ் தேதி சில முறை அறிவிக்கப்பட்டு கொரோனாவால் மாற்றப்பட்டது.

கேமராமேன் நிரவ் ஷா

கேமராமேன் நிரவ் ஷா

இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் தமிழக ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தின் சில காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டன. அந்தக் காட்சிகளை நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அஜித் ரசிகர்கள்

அஜித் ரசிகர்கள்

அவர் கூடுதல் கேமரா இயக்குனராக பணியாற்றியுள்ளதை அடுத்து அவர் பெயரும் படத்தில் இடம்பெற்றுள்ளது. படத்தின் இறுதியில் திரையில் அவரது பெயரைப் பார்த்த அஜித் ரசிகர்கள் இதை சோசியல் மீடியாவில் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். காரணம், அவர் வலிமை படத்தின் ஒளிப்பதிவாளர்.

துப்பறிவாளன் 2

துப்பறிவாளன் 2

நிரவ் ஷா, தமிழில் போக்கிரி, சண்டக்கோழி, மதராசப்பட்டினம், தலைவா, சூப்பர் டீலக்ஸ், நேர்கொண்ட பார்வை உட்பட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அவர், இப்போது வலிமை, சிவகார்த்திகேயனின் அயலான், விஷாலின் துப்பறிவாளன் 2 படங்களில் பணியாற்றி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X