Oppenheimer: பார்பியை ஒருத்தரும் கண்டுக்கல.. ஓபன்ஹெய்மரின் 2ம் நாள் வசூல் இந்தியாவில் எப்படி?
சென்னை: இந்த வாரம் கிறிஸ்டோபர் நோலனின் ஓபன்ஹெய்மர் படத்துக்கு போட்டியாக ஹாலிவுட் நடிகை மார்கட் ராபி நடித்த பார்பி படம் வெளியானது. வெளிநாடுகளில் பார்பி படம் பாக்ஸ் ஆபிஸில் ஓபன்ஹெய்மர் படத்துடன் போட்டிப் போட்டாலும், இந்தியாவில் ஒருத்தரும் கண்டுக்கொள்ளவில்லை என்பது தான் ஆச்சர்யமூட்டும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
அதற்கு காரணம் இந்தியாவில் நோலன் ரசிகர்கள் பல ஆண்டுகளாக செம ஃபார்மில் உருவாகி இருப்பது தான். டார்க் நைட், இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லார், டெனெட் என அவர் போட்டுள்ள அடித்தளம் தான் இந்த ஓபன்ஹெய்மர் படம் இந்தியாவில் ஏகப்பட்ட திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடக் காரணம் என்கின்றனர்.

படம் பார்க்க பிசிக்ஸ் கிளாஸுக்கு போன மாதிரி தான் இருக்கும் என விமர்சனங்கள் வந்தாலும், சிஜி இல்லாத யதார்த்த சினிமாவையும் சிலியன் மர்பி மற்றும் ராபர்ட் டவுனி ஜூனியரின் நடிப்பை பார்க்கவே ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்து வரும் நிலையில், வசூலும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
பார்பியை பார்க்காத இந்தியர்கள்: இயக்குநர் கிரெட்டா கெர்விக் இயக்கத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை மார்கட் ராபி மற்றும் டெட்பூல் பட ஹீரோ ரியான் கோஸ்லிங் நடிப்பில் இந்த வாரம் வெளியான பார்பி திரைப்படம் ஹாலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும், இந்தியாவில் அந்த படத்துக்கு கொஞ்சம் கூட வரவேற்பு இல்லாமல் பாக்ஸ் ஆபிஸில் அடி வாங்கி வருகிறது.
அதே சமயம் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ஓபன்ஹெய்மர் படத்தை பார்க்க இந்திய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஓபன்ஹெய்மர் 2ம் நாள் வசூல்: முதல் நாளில் ஓபன்ஹெய்மர் திரைப்படம் 12 கோடி வரை இந்தியாவில் வசூல் ஈட்டிய நிலையில், சனிக்கிழமையான நேற்று 17 கோடியாக ஓபன்ஹெய்மர் படத்தின் வசூல் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 29 கோடி வசூலை தாண்டியுள்ள கிறிஸ்டோபர் நோலனின் அணுகுண்டை கண்டுபிடித்த ஓபன்ஹெய்மரின் பயோபிக் படம் ஞாயிற்றுக்கிழமையான இன்று 20 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக முதல் வாரத்திலேயே 50 கோடி வரை இந்த படம் வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











